மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -14 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே
இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ-
பிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது
ஆனால்
எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில்
அசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது –
அவ்வருமையால் வரும் குறை தீரத் திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார்
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19-
மெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இ றே
எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

—————————————————————————————-

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள்  கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

——————————————————————————————–

வியாக்யானம் –

மாற்பால் மனம் கழிப்ப –
விஷயங்களும் பிரத்யஷிக்கையாலே இ றே
விட ஒண்ணா தாகிறது –
அப்படியே தன்னைக் காட்டுகையாலே அவன் பக்கலிலே துவக்குண்டு விஷயங்களை நெகிழப் பார்ப்பது
மங்கையர் தோள் கை விட்டு மாற்பால் மனம் வைக்க உபாயம் இல்லை –

மாற்பால் மனம் கழிப்ப –
சர்வேஸ்வரன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி
அன்றிக்கே
வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி
அன்றிக்கே
வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே மனசை சுழிக்க – என்றுமாம் –

மாற்பால் மனம் கழிப்ப –
அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –

மங்கையர் தோள்  கை விட்டு –
இதர விஷயங்களில் உண்டான சங்கம் அற்று
நரகத்தில் மூட்டக் கடவதான ஸ்திரீகள் உடைய தோள்களைக் கை விட்டு

நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க
அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம் -என்னுதல்
பிரமாணங்களில் அல்ப மனசை வைக்க எளிதாம் -என்னுதல்
அன்றிக்கே
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால்எளிதாம் -என்றுமாம் –
மங்கையர் தோள் கை விட்டு மாற்பால் மனம் சுழிப்ப வென்று சொல்லிற்று ஆகவுமாம்-

நாற்பால வேதத்தான்-
நாலு வகையாலே சொல்லப் பட்ட வேதங்களிலே பிரதிபாத்யன் ஆனவன் –

இப்படி  வேதைக சமதி கம்யன் ஆகில்
கண்ணால் காண்கிற சப்தாதிகளில் காண்பாருக்கு காண  அரிது இ றே என்னில்
வேங்கடத்தான் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –

ஆனால் கண்ணாலே காணப் படுகிற சப்தாதிகளோடு ஒக்குமோ என்னில்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
இப்படி நிற்கிறவன் நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
அவ்விடம் தன்னிலே தன்னுடைய பெரு மதிப்பு எல்லாம் தோற்றும்படி
அச்ப்ருஷ்ட தோஷ கந்தரான  நித்ய சூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு
ஈடான திருவடிகளை யுடையவன்
தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி –

பாதம் பணிந்து –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து-

நாற்பால வேதத்தான்
வேங்கடத்தான்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பணிந்து
மாற்பால் மனம் சுழிப்ப
மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்
என்று அந்வயம்

————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: