மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -13 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில்
அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை
என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத்
தாம் கண்டு அனுபவிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

———————————————————————————-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

————————————————————————————

வியாக்யானம் –

படிவட்டத் தாமரை –
பூ வலயம் -என்னக் கடவது இ றே –
பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இ றே –
சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை –
திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-

பண்டுலகம் நீரேற்று –
படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

அடிவட்டத்தால் அளப்ப –
திருவடிகளாலே அளப்ப
அடி வட்டத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம் –
ஓங்கின திரு அபிஷேகமானது
முடி வட்டம் என்று திரு அபிஷேகத்தில் ஜ்யோதிர் மண்டலம் –

நீண்ட முடி வட்டம்
வளர்ந்த திரு அபிஷேகம் –

ஆகாயமூடறுத்து –
ஆகாசத்தை ஊடுருவி –

அண்டம் போய் நீண்டதே –
அண்டபித்தி யளவும் வளர்ந்ததே –

இது ஆருக்குத் தான் என்னில் –
மாகாயமாய் நின்ற மாற்கு –
வ்யாமோஹத்தை யுடையனானவனுக்கு

இத்தால்
இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று
இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –
பண்டு உலகம் நீரேற்று
படி வட்டத் தாமரை அடி வட்டத்தால் அளப்ப
மாகாயமாய் நின்ற மாற்கு
நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து
அண்டம் போய் நீண்டது
என்று அந்வயம்-

—————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: