மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -12 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய்
விட ஒண்ணாதோ என்னில்
நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக்
காணலாம் -என்கிறார் –
இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை
உபபாதிக்கிறார் –

—————————————————————————-

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி  ——12-

——————————————————————————–

வியாக்யானம் –

அறிவென்னும் தாள் கொளுவி –
வ்யதிரிக்த விஷயங்களில் மனஸ் ஸூ போகாதபடி
அறிவாகிற தாளைக் கொத்துத்
திண்ணிதான ஸ்ரவண ஜ்ஞானத்தை மூட்டி –

ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண் கதவம் செம்மி –
ஐந்து இந்த்ரியங்களில் போகாதே
ஸ்வ ஸ்தானங்களில் யாம்படி செறிவிக்கை யாகிற
திண் கதவுக்கு உள்ளே
புகவிட்டுப் புறப்படாத   படி அடைத்து-
பாஹ்ய இந்த்ரியங்கள் மனஸ் சோடே கூடி இருக்கிற
இந்தச் செரிவாகிற திண்ணிய கதவை இந்த்ரியங்கள்
பாஹ்ய விஷயங்களில் போகாதபடி செம்மி
இத்தால் இந்த்ரிய நியமத்தைச் சொல்லுகிறது –

-மறை யென்றும் நன்கோதி –
யென்றும் பர ஹிதத்தையே பிரதிபாதிக்க கடவதான வேதத்தை தரித்து
யோகாத் ஸ்வாத்யாய மாம நேத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-2-
யோகம் கை வந்தாலும் பிரமாண ப்ரமேயங்கள் உடைய சேர்த்தி அனுபவிக்க வேணும் –

நன்குணர்வார் காண்பரே-
அவ்வழியாலே அழகிதாக காணும் அவர்கள் யென்றும் ஒக்க காணப் பெறுவார்
நன்கு உணர்வார் ஆகிறார் -ஸ்ரவண மனன நிதித்யாசன த்ருவாநுஸ்ம்ருதி தர்சன சாமா நாகாரதா பிரத்யஷதாபத்தி
இவ்வளவாக உணர்ந்தவர்கள் –

ஆரைத் தான் இப்படிக் கண்டது என்னில் –
நாடோறும் பைங்கோத வண்ணன் படி  –
பச்சென்ற நிறத்தை உடைத்தான
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனுடைய பிரகாரத்தை –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி
இப்படி உணர்ந்தவர்கள் நாடோறும் காணப் பெறுவார்கள்
சதா பஸ்யந்தி-இ றே-

நன்கோதி நன்கு உணர்வார் –
ஒமித்யேவ சதா விப்ரா பட தத் யாத கேசவம் -ஹரி வம்சம் -பவிஷ்ய -89-9-

நன்கு உணர்வார் –
முறை தப்பாமே அனுசந்திப்பார் -என்றுமாம்  –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: