மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -11 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி
அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது
கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –
அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –
என்கிறார் –

———————————————————————————————-

நன்கோது நால்  வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

———————————————————————————————

வியாக்யானம் –

நன்கோது நால்  வேதத் துள்ளான் –
க்ரமத்திலே  தரிக்கபட்ட நாலு வகையான வேத பிரதிபாத்யனாய் உள்ளான்
வ்ரத நியமங்களோடே கூட சங்காத் யயனம் பண்ணப் பட்ட வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவன்
வேதைஸ் ஸ சர்வை ரஹமேவ   வேத்ய -என்னும்படியே
நால் வேதத்து  உள்ளான் –
தாத்பர்ய வ்ருத்தியாலும் அபர்யவசான வ்ருத்தியாலும்
எல்லா வேதங்களுக்கும் தானே பிரதிபாத்யன்
அன்றிக்கே
நன்கோதும் என்று எம்பெருமான் தன்மையை ஓதும் -என்றுமாம் –

நற விரியும் பொங்கோதருவிப் புனல் வண்ணன்  –
நன்றாக
மிகவும் விக்ருதமாகா நின்றுள்ள
கிளர்த்தியை யுடைத்தான கடல் போலேயும்
அருவிப் புனல் போலேயும் உள்ள நிறத்தை உடையவன்
அன்றிக்கே
நறவு இரியும் என்று தேன் தோற்கும்படி நிரதிசயமான போக்யதையை
உடையனாய் யுள்ளான் -என்றுமாம் –
சர்வ கந்தஸ் சர்வ ரச-என்கிற
உடம்பு படைத்தவன் -என்றபடி –

-சங்கோதப் பாற்கடலோன் –
சங்குகள் மேலேயாம்படி கோஷியா நின்றுள்ள ஓதத்தை உடைய
திருப் பாற் கடலிலே -கண் வளர்ந்து அருளினவன்
அன்றிக்கே
சங்குகளையும் ஓதத்தையும்  உடைய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -என்றுமாம்
வேதைக சமதி கம்யன் அணித்தாக வந்தான் -என்றபடி –

பாம்பணையின் மேலான் –
அந்த நீர் உறுத்தாத படி
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
அனந்த சாயி -என்றபடி
அன்றிக்கே
ஆஸ்ரிதரைக் கை விடாத ஸ்வபாவன் -என்றுமாம் –

பயின்று  உரைப்பார் நூற் கடலான் –
வேதத்திலே மிகவும் வாசனை யுடையாராய் உள்ளவர்கள் உடைய
ஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே பிரதிபாத்யனாய் உள்ளான்
அன்றிக்கே
ஆதரமாக உரைக்குமவர்களாலே இதிஹாஸ் புராணங்களாலே பிரதிபாதிக்கப் படுமவன் -என்றுமாம் –

நுண்ணறிவினான் –
கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –
ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் -என்றுமாம் –

—————————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: