மூன்றாம் திருவந்தாதி -பிரவேசம் /தனியன் /-பாசுரம் -1 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

பிரவேசம் –

கீழ் இரண்டு ஆழ்வார்கள் உடைய ப்ரசாதத்தாலே ரத்னாகாரத்தைக் கண்டாப் போலே
ஸ்ரீ யபதியான எம்பெருமானைப் பரிபூர்ணமாகக் காணப் பெற்றேன் –
என்கிறார்
இத்திருவந்தாதி ஒருவருக்கு நிலம் அல்ல –
கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே –
ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பேயரே எனக்கு -இத்யாதி -பெருமாள் திருமொழி -3-8-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றது
பக்தி ரூபா பந்நமான முதல்திருவந்தாதி –
எந்தன் அளவன்றல் யானுடைய அன்பு -இரண்டாம் திரு -100–என்கையாலே அது பர பக்தியாய்த்   தலைக் கட்டிற்று கீழில் திருவந்தாதி –
அப் பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இ றே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

 

——
முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்

வையம் தகளி  -ஞானத்தைச் சொல்லுகிறது
அதாகிறது
அவன் சேஷி என்றும்
நாம் சேஷம் என்றும் அறியும் அறிவு
அன்பே தகளி -ஞான விபாகமாய்
அது உண்டானால் உண்டாகக் கடவ பர பக்தியைச் சொல்லுகிறது
இனி அந்த பர பக்திக்கு அநந்தரம் ஆன
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது

சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

எம்பெருமான் கடல் கடைய
தேவர்கள் நடு நின்றால் போலே
முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன்
என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த  சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து

———————————————————————————————

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————————————————————————————————

வியாக்யானம் –
திருக் கண்டேன் –
எல்லா ஐஸ்வர் யத்துக்கும் உடலான பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
தன்னை ஒழிந்தார் அடைய தன்னைப் பற்றி லபத ஸ்வரூபராக வேண்டும்படி
ப்ரதானையான பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
இவள் கடாஷம் பெறாத போது
அவனோடு
அல்லாதாரோடு
வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே
அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே
சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள்  –
யதோ உபாசனம் பலம் இ றே –
தத் க்ரது நியாயம் போலே உபாசனம் ஒன்றாய் பலம் ஒன்றாய் அல்லவே இருப்பது
இரண்டும் ஒன்றாய் இ றே இருப்பது
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை  நங்கள் திரு -இரண்டாம்  திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –

திருக் கண்டேன் –
நிரூபக தர்மமான பிராட்டியைக் கண்டேன்
பிரபையைக் கண்டு இ றே ஆதித்யனைக் காண்பது –
பாஸ்கரேண் பிரபா யதா -சுந்த -21-16-

பொன் மேனி கண்டேன் –
அவளும் தண்ணீர் தண்ணீர் எண்ணும்படியான நிறம் கண்டேன்
ருக்மாபம் ஸ்வனப்தீ   கம்யம்
திரு உடம்பில் ஸ்லாக்யதை இருக்கிறபடி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இவருடைய சேர்த்தியாலும்
பாலார்க்கன் திகழா நின்ற நிறம் கண்டேன்
இள வெய்யில்  கலந்தால் போலே
புகர் மிக்க நிறமும் கண்டேன் –
சோபயன் தண்ட காரண்யம் -ஆரண்ய -38-15-
இருவ ருடைய ஒளியும் கலசின் படி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்-
இருவருடைய சேர்த்திக்கும் என் வருகிறதோ என்று
அஸ்தானே
பய சங்கை பண்ணி
யுத்தோன் முகமாய்-கண்டார் மேல்சீறி விழுகிற
திருவாழியைக் கண்டேன்   –

பொன்னாழி –
தனக்குச் சிலர் பரிய வேண்டும்  அழகு உடையவன்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
என்னும் படி இருக்கிற திருவாழியைக் கண்டேன் –

புரிசங்கம் கைக் கண்டேன் –
ஆழ்வானைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்துச் சீறுகிற
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கண்டேன் –
பரதன் தம்பி யன்றோ என்று
இளைய பெருமாளையும் அதி சங்கித்துக் கொண்டு திரியும்
ஸ்ரீ குஹப்  பெருமாளைப் போலே
திருவாழி தன்னையும் அதி சங்கை பண்ணிக் கொண்டு புகுகிற சங்கை
அழகிய கையிலே கண்டேன்
இளைய பெருமாளைப் போலே
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமா ஸீ நம் -அயோத் -4-42-என்னும்படி யாகவுமாம்-
என்னாழி வண்ணன் பால் –
எனக்கு ஸ்வம்மாய்க்
கடல் போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் பக்கல் –
அபரிச்சேத்யனானவன் பக்கலிலே
இவ்வடிவு அழகை எனக்குக் காட்டினவன் பக்கல் -என்றுமாம் –

என் ஆழி வண்ணன் –
இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இ றே
பிராட்டியும்
சங்கும்
ரத்னமும்
எல்லாம் பிறப்பது –
கலைகளும் -இத்யாதி
மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்று இவர்  -பெரிய திருமொழி -2-8-5-

இன்று –
அவன் காட்டக் கண்ட இன்று
இவள்  புருஷ்காரமாகக் கண்டேன் இன்று
என்றுமாம் –

————————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: