மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -2 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவனைக் கண்ட போதே
விரோதி வர்க்கம் அடையப் போய்த்து
என்கிறார் –

—————————————————————————-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

——————————————————————————

வியாக்யானம் –

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –
கழல் கண்டேன்
ஏழ் பிறப்பும் இன்றே அறுத்தேன்
திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
காண்கைக்கு ஒரு காலமும்
விரோதி போகைக்கு ஒரு காலமும் இல்லை கிடீர்
அககாலத்திலேயே கிடீர் போயிற்று
த்ருஷ்டே நைவ ஹி நச்சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்யா -8-4-
அத்ய மே ஹி கதஸ் சோக  –

இன்றே கழல் கண்டேன் –
கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –

ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் –
பிரதி பந்தகம் போய்த்து யென்னும்படியாய் யாயிற்று
அடிமை செய்யவும் பெற்றேன்
சம்சாரம் போனவற்றோ பாதியாகவும் பெற்றேன் –

பொன் தோய் வரை மார்பில் –
பொன் தோய்ந்த மலை போல் இருக்கும் மார்பில் –

பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட –
தோளில் மாலையைப் பிராட்டி கண்டு கொள்ளும் படி நின்ற –

அன்று திருக் கண்டு கொண்ட –
பிராட்டியோட்டை சம்பந்தம் அநாதி இ றே –

பொன் தோய் வரை மார்பில் –
பிராட்டி பிச்சேறும்படியான மார்பை யுடையவன் –

அன்று திருக் கண்டு கொண்ட –
அம்ருத மதன காலத்தில்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயௌ வஷச்தலம் ஹரே -ஸ்ரீ விஷ் புரா-1-9-105-என்று
பிராட்டி தானே ஆசைப் பட்டு ஏறும்படியான மார்வைப் படைத்த ஸ்ரீ யபதியே

திருமாலே –
அவள் பக்கலிலே அவன் பிச்சேறி இருக்கும் படி –

உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம் –
அவள் விரும்புகிற விஷயம் என்று
பிற்காலியாதே
மருவிக் கண்டு கொண்டது என்னுடைய மனஸ் ஸூ  –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க்  கண்டேனோ –
விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு   வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

———————————————————————————————————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: