மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -3 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ்
இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது
இதில் –

———————————————————————————

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-

————————————————————————————-

வியாக்யானம் –

மனத்துள்ளான் –
உத்தேச்யம் அவ்விடமே
மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –

மா கடல் நீருள்ளான் –
அதுக்கு அவசர ப்ரதீஷனான படி
ஆஸ்ரித ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் –

மலராள் தனத்துள்ளான்-
அவ்வோபாதி பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தையும் ஒரு  ஸ்தானமாகக் கொண்டான்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்வன் இ றே
அங்கு நின்றும் தாண்டிக் கொண்டு போருகைக்குப் பரிகரம் அவள் தானே இ றே
ஐஸ்வர்யம் ஆகவுமாம்-
கீழ் எல்லா வற்றாலும் –
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
அகப்படி வந்து புகுந்து   -என்றபடி –

மலராள் தனத்துள்ளான் –
அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –

தண் துழாய் மார்வன்-
அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
அவள் திரு முலைத் தடத்தில் அவன் பண்ணும் விருப்பத்தை
இவன் தோளில் மாலையிலே பிராட்டி படும்படியான
தோள் மாலையை யுடையவன் –

சினத்துச் செரு நருகச் செற்று –
சினத்திலே செறுநர் ஆனவர்கள் மங்கும் படி செற்று
அன்றிக்கே
சினத்தென்ற இத்தைச் செறுநர் உடன் கூட்டிச்
சினத்தை உடைய செறுநர் உகச் செற்று -என்னவுமாம்
இது பிராட்டிக்கு பிரியமாகச் செய்த செயல்
தம் த்ருஷ்ட்வா –பார்த்தாராம் பரிஷ்ச்வஜே -ஆரண் -30-39-

உகந்த  –
ஆசரித விரோதிகள் போக்கப் பெற்றோம் என்று உகந்த படி –

தேங்கோத வண்ணன் –
தேங்கின கடல் போலே இருக்கிற திரு நிறத்தை உடையவன்
அத்தாலே
ஸ்ரமஹரமான வடிவை உடையனானான்
விரோதி நிரசனத்தால் வந்த அழகு –

வரு நரகம் –
அவஸ்யம்   அனுபோக்தவ்யம் -என்று
இவனால் தடுக்க ஒண்ணாத சம்சார  துரிதம் –

தீர்க்கும் மருந்து –
அனுபவித்தால் அல்லது விடாத நரகத்தைக் கடக்கைக்கு பேஷஜம் ஆனவன்
மருத்துவன் என்று அவன் ஸ்வ பாவம் சொல்லுகிறது
கருத்து இருக்கும் என்னுமா போலே
மனஸ் ஸூ க்குப் புகுருகைக்கு அடி இவ்வாத்மா தானே இ றே
ஆத்மைவ ரிபுராத் மன –

வரு நரகம் தீர்க்கும் மருந்தாய்க் கொண்டு மனத்துள்ளான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
தண் துழாய் மார்வனாய் மலராள் தனத்துள்ளானாய்     மா கடல் நீருள்ளானாய்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணனாய் மனத்துள்ளானவன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து  –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: