முதல் திருவந்தாதி-பாசுரம் -98 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவிர்சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு
அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று
இவனைக் குறையச் சொல்லுகிறது என்-
அவனைத் தனியே ஈஸ்வரனாகவும்
அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது
என்னில்
அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது
அத்தனை போகக்
ச்வத இல்லை -என்கிறார் –

————————————————————————————–

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் ——98-

—————————————————————————————

வியாக்யானம் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் –
பொன் போலே உஜ்ஜ்வலம் ஆகா நின்றுள்ள
வடிவையும் பின்னின சடையையும் உடைய

அம் புண்ணியனும்
அழகியதாக சாதனத்தை அனுஷ்டித்து உள்ளவனும் –

பொன் திகழும் மேனி –
சர்வேஸ்வரன் மேக ச்யாமனாய் இருக்கும் இ றே –
அதுக்கு எதிர் தட்டு

புரி சடை –
தாழ் சடையானுக்கும் நீண்  முடியானுக்கும்
வாசி பார்த்துக் கொள்ளும் இத்தனை இ றே

அம் புண்ணியனும் –
ஹூத்வாத்மா நம் தேவதேவோ பபூவ -என்னும்படியே
பாபம் ப்ராமாதிகம்
இப்பததுக்கு அடியாகப் பண்ணின புண்யம் –

நின்றுலகம் தாய நெடுமாலும்
ச்வைரமாக ஆதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும்
ருத்ரன் தன்னோடு பிறரோடு வாசி அற
எல்லார் தலைகளிலும் திருவடிகளை
நின்ற இடத்தே நின்று வைக்கப் பிறந்த சர்வேஸ்வரனும்-

என்றும் இருவரங்கத்தால் திரிவரேலும் –
எப்போதும் இரண்டு தேஹத்தைப் பரிஹரித்துக் கொடு
திரிந்தார்களே யாகிலும் –

ஒருவன் ஒரு வனங்கத் தென்று முளன் –
ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
அன்றிக்கே
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி
லப்த ஸ்வ ரூபனாய் இருக்கும் என்னுதல்-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – திருவாய்மொழி -1-3-9-என்னும்படியே –

ஆக
இத்தால்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்  தெய்வம் மற்றில்லை -திருவாய்மொழி -4-10-3-என்றபடி –

———————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: