முதல் திருவந்தாதி-பாசுரம் -97 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று
அவனையே பாவனத்வமாகச் சொன்னீர்
புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ
என்னில்
அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம்
என்கிறார் –
பிடிசேர்
கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  –

——————————————————————————–

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் ——97–

————————————————————————————

வியாக்யானம் –

பிடிசேர் களிறளித்த பேராளா –
பிடியோடு சேர்ந்த களிறு ஆயிற்று
அதாகிறது
அத்தோடு சேரத் திரியுமதுக்கு மேல் பட
ஸ்வ ஹிதத்தில் ஒரு சிந்தை பண்ணி அறியாதாய்த்து –
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷூ -என்னுமவன் இ றே மோஷத்துக்கு அதிகாரி
அன்றிக்கே
தன் பக்கல் பிரவணம் ஆகாதே
விஷய ப்ரவணமாகை இறே பாபம் ஆவது –
பிடியின் பக்கலிலே ப்ரவணமாய் –
தன் பக்கலிலே இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது
தான் இட்ட வழக்காக வேண்டாவோ
அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்து இருந்திலையோ  –
ஒருக்கால் நினைத்தானே என்னில் முன்புத்தை ஸ்வரூபம் இது வன்றோ என்கிறது
இத்தால் ஜன்ம வ்ருத்தங்கள் பிரயோஜகம் அன்று -என்கிறார்

அளித்த பேராளா –
அத்தை நோக்கின பெரியோனே
இப்படி அதிகாரி சம்பத்தி இல்லாதவனையே ரஷித்தான் என்றால்
அவன் செய்தானாகில் கூடும் என்று இருக்கை-

பேராளா  –
அவ்வளவேயோ உன் கிருபை
எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ -திருவாய்மொழி -3-3-3-

உந்தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –
உன் திருவடிகளை கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் பெற்றது
இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது
க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
கங்கை தனக்கே தர்மத்வம் சொல்லா நின்றது இ றே என்னில்
அதினுடைய பாவனத்வத்துக்கும் அடி அவன் என்கிறது –
பிறரையும் சுத்தமாக்கும்படி பார்த்து அருளினான் –

பொடி சேர் –
பஸ்மத்தை தரித்து இருக்கும் என்னுதல்
அதிலே போய்ச் சாயும் என்னுதல்-

அனற்கு அங்கை ஏற்றான் –
அக்னிக்கு அழகிய கையை ஏற்றான்
பஸ்மத் சந்தன் இ றே
இது ஒழிந்த பிராயச் சிந்தங்களால்  பாபம் போகாது ஒழிந்த படி
இவனுடைய ஈஸ்வர அபிமானத்தை வந்தேறி யன்றே என்று இருந்தான் –

ஸ்வா பாவிக சம்பந்தத்தையே நினைத்து ரஷித்தான்-

அவனுடைய
அவிர்சடை  மேல் பாய்ந்த-
ஒளியை யுடைய சிவந்த சடையின் மேலே வந்து குதித்த நீரை
உடையளாய் கங்கை என்னும் பேரையும் உடையளாய்
ஸ்லாக்யையான ஸ்த்ரீயானவளும் –

உந்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்-பெரியாழ்வார் திருமொழி -4-7-2-
பாதோதகேன ச சிவா
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை
உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை
யத் த்வத் ப்ரியம் ததி ஹ புண்யம் அபுண்ய மன்யத் -அதிமாநுஷ ஸ்தவம் -53-

————————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: