முதல் திருவந்தாதி-பாசுரம் -96 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சேதனர் செய்தபடி செய்ய
நெஞ்சே
நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார் –

————————————————————————–

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட்   பிடி ——96–

——————————————————————————–

வியாக்யானம் –

திறம்பாது கடைக்கட்   பிடி -என்று
மேலே கூட்டவுமாம் –

திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்-என்று
எம்பெருமானோடே கூட்டவுமாம்

அன்றிக்கே
திறம்பாது என் நெஞ்சமே-என்று கிடந்தபடியே என்னவுமாம்

நான் சொல்லிற்று தப்பாதே செய்து போருகிற நெஞ்சே
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் என்று இருக்கிற நெஞ்சே

என் நெஞ்சமே –
சொல்லு சொல்லு என்று அலைக்கிற நெஞ்சே –

செங்கண் மால் கண்டாய்-
புண்டரீகாஷனான  சர்வேஸ்வரன் கண்டாயே
யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷி ணீ
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் -திருவாய்மொழி -6-7-10-

அன்றிக்கே
செங்கண் மால்
நம் விஷயத்தில் அவன் இருக்கிறபடி கண்டாயே –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் –
புண்ய பாப ரூபா கர்மங்கள் ஆகிறான் அவன் கிடாய்
அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று
பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்
விஹிதத்தைச் செய்து
நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற  நம்மோடு
விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி –
தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்ந்த பின்பு ஓர் அசேதன கிரியையைப் பற்றுமவர் அன்றே

செங்கண் மால் கண்டாய் –
சர்வ நியந்தா கிடாய் அவன் -என்கிறார் –
திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்
அவனை ஒழியப் புண்ய பாபம் என்று தோற்றுவது
ஆபாத ப்ரதீதியில்
நிலை நின்று பார்த்தால் அவனே கடவும் என்று தோற்றும்
எங்கனே என்னில்  –
புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே-
சர்வமும் பகவததீனம் அன்றோ
இம் மண்ணும் மறி கடலும் மாருதமும் புறம் தான்
இவற்றுக்கும் அவ்வருகான மகாதாதிகளும் இவை எல்லாம் ஆகிறான் அவன் கிடாய் என்கிறார்
பிரதிபந்தகமான அசித்தோடு கூடிய சேதனமும் அவனே –

கண்டாய்  கடைக்கட்   பிடி-
இத்தைக் கடைப்பிடி -என்றபடி –
அன்றிக்கே
கடைக்கண் என்றாக்கி முடிவில் வந்தால் இருக்கும்படி அது கிடாய்
இத்தை திறம்பாது பிடி –
தவிராமல் புத்தி பண்ணு

மண் தான் இத்யாதி –
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிருமானாய் -திருவாய்மொழி -6-9-7-
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யமே நிரங்குசமாகச் சொல்லா நிற்க
இங்கே தன் ஸ்வா தந்த்ர்யம் சொல்லுகிறபடி எங்கனே என்னில்
கார்யத்தில் ஒன்றும் இல்லை
பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அன்யதா ப்ரதிபத்யதே
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: