முதல் திருவந்தாதி-பாசுரம் -94 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா
அவ்வழியே துர்யோதன கோ ஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் –
அதாவது
பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல்
அன்றிக்கே
பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால்
செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும்
கீழில் பாட்டுக்கு சே ஷமாக்கி நிர்வஹித்தல்
அன்றிக்கே
இப்பாட்டு தனக்கு உடலாக்குதல்    –

—————————————————————————————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா ——-94-

————————————————————————————–

வியாக்யானம் –

செற்று எழுந்து தீ விழித்துச் –
பீஷ்மாதிகளுக்கு ஆக்கின போது மேல் முடிக்கக்கடவ
படியை யடங்க ரூப தர்சனத்தாலே
தெரிவித்த படியைச் சொல்லிற்றுஆகிறது –
தூது போனதாகில் இனியொரு தூது வேண்டா வென்று
துரியோநாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –
அன்றிக்கே
ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்குக் காட்டின போது அந்த சம்ஹார சமயத்தில் கொண்ட வடிவாகிறது –
சென்ற  விந்த வேழ் உலகும் –
தன பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான
ஏழு உலகங்களையும் –

மற்றிவையா வென்று வாய் அங்காந்து –
அவையாகிறன இவை தான் என்று வாயை
அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123  -என்னும்படியே
அன்றிக்கே
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இ றே-

முற்றும் மறையவர்க்குக் காட்டிய-
தன பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –

மறையவர்க்கு
ரேபாந்தனான போது ஸ்ரீ பீஷ்மாதிகள் ஆகிறது

மறையவற்க்கு
என்று னகர ஓற்றான போது ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு ஆகிறது –

மாயவனை யல்லால் –
ஆச்சர்ய பூதனை அல்லால்
ஒருக்கால் சாமான்ய ரஷணத்திலே
ஒருக்கால் ஆஸ்ரித அர்த்தமாக –

இறையேனும் ஏத்தாது என் நா –
என் நாவானது ஷண  காலமும் ஸ்தோத்ரம் பண்ணாது –

இறையேனும் –
பர வ்யூஹாதிகளில் போகாது –

ஏத்தாது என் நா –
எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

———————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: