முதல் திருவந்தாதி-பாசுரம் -93 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷபாதம் சொல்லிற்றே நின்றது
நீர் சொல்லுகிற பஷபாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன
இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன்  மேலே சீற்றி
என்கிறார்
அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-
கீழில் பாட்டில்
வாத்சல்யமாய்
வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார்  –

————————————————————————–

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

——————————————————————————

வியாக்யானம் –

வயிறு அழல வாளுருவி வந்தானை –
கண்ட அனுகூல வர்க்கம் அடங்கலும் வயிறு எரியும்படியாக வாளை உருவிப்
பிடித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று
எங்கனே யுய்வர்  தானவர் நினைந்தால் -பெரிய திரு மொழி -5-7-5-என்று
நரசிம்ஹத்தைக் கண்டால்
அசூர ராசாச ஜாதியாகப் படும்பாட்டை
இவனைக் கண்டு அனுகூல ஜாதி படும்படி

வயிறு அழல –
வயிறு அழலுகிறது ஆர்க்கு என்னில் -ஆழ்வார்க்கு –
முன்பு ஒரு நாள் ஹிரண்யன் பகையாகச் செய்தானாய் இராதே
தம் எதிரே வாள் உருவிக் கொண்டு புறப்பட்டாப் போலே இருந்தபடி
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-என்றபடியே
அஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்தத் -17-5-

யஞ்ச எயிறிலக  வாய் மடுத்த தென் நீ –
அவன் வெறுவும்படிக்கு ஈடாக எயிறுகள் ஆனவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்
நாய்ச்சிமார்க்கும் ச்ப்ருஹநீயமாம்படிஇருக்கிறது காணும்
இப்போதைய அட்டஹாசம்
போக்கற்ற விடத்தில் செய்யும் செயல் இ றே இது
பிராட்டிமார்க்கு சம்போதகத்தில் திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும் படிக்கு ஈடாக ஹாசமே அமையும் படியாய் இருக்கிறது –

பொறி யுகிரால் -இத்யாதி –
நாநா வர்ணமாய்
தர்ச நீயமான உகிராலே-
சம்போகத்துக்கு ஏகாந்தமான அழகை உடைய உகிராலே –

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா –
சௌகுமர்யத்தாலும் அழகாலும் பூவினுடைய அழகு தான்
தள்ளுண்டு போம்படி இருப்பதாய்
ச்ப்ருஹ நீயமான திரு வாழியை தரிப்பதான கையை உடையவனே
அறு காழியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

நின் சேவடிமே லீடழியச் செற்று –
நாய்ச்சிமார் சாய்ந்து அருளும் படியான திருவடிகளின் மேலே அவனை ஏறிட்டு -என்னுதல்
என்றும் நாங்கள் ஆசைப் பட்டுப் பெறுகிற திருவடிகளிலே என்னுதல் –

மறுமூட்டுப் பொறாமல் சிந்திப் போம்படிக்கு ஈடாக முடித்துப் பின்னையும்
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
சங்கல்பம் தவிர்ந்து
திருவாழி தவிர்ந்து
திரு உகிராலே பிளந்து
பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வது என்
அவன் முடிந்த போன பின்பும் சீற்றம் மாறாதே இருந்ததுக்கடி
சிறுக்கன் பக்கல் உண்டான வ்யாமோஹாதிசயம் இ றே –
முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு-

மரணாந்தானி வைராணி -யுத்தம் -114-101-இ றே அது
த்வயி கிஞ்சித் சமா பன்னே -கிம் கார்யம் சீதயா மம -யுத்த 41-4-என்னும் விஷயத்தில் இப்படியே
கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இ றே வாத்சல்யம்
முன்னணை    கன்றைக் கொம்பிலே சூடுகை இ றே –
கொண்ட சீற்றம் உண்டு என்று
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்
ததோ ராமோ மகா தேஜா யுத்தத் -59-136
கண்டு கொண்டு இருக்கும் விஷயம் எதிர் விழுக்க ஒண்ணாத படி யாவதே
பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் நெருப்பானால் விலக்காவது உண்டோ –

ராவனேன க்ருத  வ்ரணம்
கொசுகாலே சிம்ஹத்துக்குப் பரிபவம் வந்தவோபாதி
தன் செலவிலே ஆதித்ய மண்டலத்தைப் பழம் என்று பாஞ்சு வந்த  வ்ரணம் போலேயோ இது
த்ருஷ்ட்வா கோபச்ய வசமேயிவான் –
கண்ட பின்பு பெருமாளைக் கண்டதில்லை
தம்மை மறந்தார்
திருவடியை மறந்தார்
ந ராவண சஹச்ரம் மே -என்னுமவன் இ றே
அவன் அப்போது ப்லாவகசார்த்தூலன் ஆனான்
கோபச்ய வசமே இவான்
அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்
கருத் யத்யபி சப்தோபி க்ரோத நீயானி வர்ஜயன்
ச ச நித்யம் ப்ரசாந்தாத்மா -என்னும் படி இ றே அது –

——————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: