முதல் திருவந்தாதி-பாசுரம் -92 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று
இங்கு
அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன்
என்கிறது –
அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –
ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்
இடையனாகில் வெண்ணெய்தாரகமாம் –

—————————————————————————————

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு ——92-

————————————————————————————–
வியாக்யானம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் –
பூத பஞ்சகங்களாலும்
ஆரப்தமான அண்டாந்தர வர்த்தி புருஷர்களுக்கு நிர்வாஹகனாய் –

தேனாகிப் பாலாம் திருமாலே –
சர்வ ரச-என்கிறபடியே நித்ய விபூதியிலே உள்ளார்க்கு
போக்யனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது –
தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்
ஆக
இவ்விரண்டாலும்
உபய விபூதி யுக்தன் -என்றபடி –

உபய விபூதி யோகத்துக்கும் மேலாய்
ஒரு ஐஸ்வர்யம் போலே காணும்  ஸ்ரீயப்தித்வமும் –
ஆகைத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கும்
காமிநி க்கைக்கும்
ஒரு விஷயம் உண்டாவது என்றபடி

அவள் திரு முலைத் தடத்திலும் வெண்ணெய் போக்யமான படி
அது போக்யம் –
இது தாரகம் -என்றபடி
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் உரலினோடு இணைந்து இருந்து
ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1-என்னக் கடவது இ றே –
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –

ஆனாய்ச்சி   வெண்ணெய் –
வெண்ணெயிலே அல்பம் முடை நாற்றம் குறையில் புஜியான் யாய்த்து

நிறையுமே –
குறைக்கும் இட்டு அடைக்க வேணும்
சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –
பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: