முதல் திருவந்தாதி-பாசுரம் -91 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும்
இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
என்கிறார் –
ஹேயத்திலே ஹேயதா புத்தியும்
உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும்
வேண்டாவோ -பேற்றுக்கும்
கீழில் பாட்டில்
ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –
இதில் –
ருசி தான் வேண்டுவது –
என்கிறது –

———————————————————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ —-91–நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான்

————————————————————————————

வியாக்யானம் –

ஊனக் குரம்பையினுள் புக்கு –
தோஷமே யான தேஹத்திலே தோஷம் உள்ள எல்லை யளவும் செல்ல அவகாஹித்து –
மாம்ஸ மயமான தேஹம் என்னக் கடவது இ றே
ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அனர்த்தமாய் பீபத்சமாய் அகவாய்
தெரியாதபடி மேலே தோலை வைத்து மினுக்கி
ஆபாத ப்ரதீதியில் நன்று என்று தோற்றும் படி இ றே இருப்பது
குரம்பை என்கிறது ஆத்மாவுக்கு ஒரு குடிலோபாதி ஆகையாலே –

கிருள் நீக்கி –
அத்தை போக்யம் என்று இருக்கிற
அஞ்ஞானத்தைப் போக்கி –

ஞானச் சுடர் கொளீஇ –
ஞானம் ஆகிற தேஜஸ் சைக் கொளுத்துவது –
விளக்கை ஏற்றுவது –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக ஈஸ்வர ஜ்ஞானத்தையும் உண்டாம்படி பண்ணி
பிரகாரமான தன்னையும் விட்டு
பிரகாரியான தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி
ஸ்வ ரூபம் உண்டாய்
ஒருகால் இல்லையாமதல்ல –
அத்தை மறைக்கில் ப்ரயோஜ நாந்த்ரங்களும்
உபாயாந்தரங்களும் தலை எடுக்கும் –

நாடோறும் ஏனத் துருவா யுலகிடந்த -ஊழியான் பாதம்  மருவதார்க்கு உண்டாமோ வான்
தன் விபூதி  அழிய
தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே
தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு
நித்ய விபூதி உண்டாமோ –

நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்
ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –

ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய்
நம்மை ரஷிக்குமவன்

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல்வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ
-என்றானாம் –

கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –
ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத்திரிய
பேறு உண்டாமோ
முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமைஇ றே
அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இ றே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ –

————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: