முதல் திருவந்தாதி-பாசுரம் -90 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு
அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித்
தன்னைக் கொடுத்த படி
சொல்லுகிறார் –
நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும்
வாத்சல்யத்தையும்
அனுசந்திக்கிறார் –

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் ——90-

——————————————————————————————

வியாக்யானம் –

வரத்தால் வலி நினைந்து –
சர்வேஸ்வரன் கொடுக்கப் பெற்ற தேவதைகள் பக்கலிலே
வரத்தைப் பெற்று
அத்தால் வந்த பலத்தை அனுசந்தித்து
இருந்தான் ஆய்த்து-
மெல்லியத்தை உறவிதாகக் கொண்டு  பிரமித்து இருந்தான் ஆய்த்து –
வர பலத்தை அனுசந்தித்து ஈச்வரனிலும் தன்னைப் பெரியானாக அபிமானித்து இருந்தான்
அத்தனை அல்லது
வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி
பகவத் அதீனம் என்று அறிந்திலன் –

மாதவ் –
சர்வராலும் சமாஸ்ரயணீயன் ஸ்ரீ யபதி போலே
இவனும்
இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே –
தேவர் திருவடிகளை ஆதரித்துக் கொண்டு ஆஸ்ரயித்திலன்-என்றே
அதாகிறது –
உன் பக்கலிலே ஒரு சாத்ரவம் பண்ணினான் என்னுமது கொண்டு அன்று இ றே
சிறுக்கன் பக்கலிலே ப்ராதிகூல்யம்  பண்ணித் தப்ப நின்றான் -என்னும் அத்தாலே இ றே -என்னுதல்
அன்றிக்கே
அவன் தேவர்க்குப் பண்ணுவதொரு அபகாரம் உண்டோ –
தன பேறு தான் இழந்தான் என்னுமது கொண்டு இ  றே -என்னுதல்
தப்பச் செய்தோம் என்னாமை -என்னுதல்
உன் வஸ்து அழியாமைக்கு -என்றுமாம் –

உரத்தினால் –
வரத்தினால் வந்த வலியை-
நினைத்து இருந்தவன் கூட
பிற்காலிக்கும் படியான
பலத்தை உடையானாய்க் கொண்டு –

ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை –
ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய இரணியனை –
கீழே வர பலம் சொல்லிற்று
இங்கே புஜ பலம் சொல்லுகிறது  –

உரத்தினால் ஈர் அரியாய் –
மிடுக்காலே ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்
அன்றிக்கே
பெரிய சத்ரு -என்னுதல்
அன்றிக்கே
உரத்தினால் ஈர் அரியாய்  நீ இடந்தது ஊன் -என்று மேலே கூட்டவுமாம் –

ஒரரியாய் –
நாட்டில் நடையாடாத அத்விதீயமான நரசிம்ஹம் -என்னுதல்
அன்றிக்கே
இச் செயலை அனுசந்திக்க ஆஸ்ரிதர்க்கு எப்போதும் கிட்டும்படியான நரசிம்ஹமுமாய்
அதாகிறது
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு இவ்வருகு உள்ளார் அடங்க இச் செயலை அனுசந்தித்து
அச்சம் கெட்டு இருக்கும்படியாய் இருக்கை-

ஓர் அரியாய்
காமத்வ ஜாயதே -என்று தன்னுடைய இச்சையாலே பிறந்த நரசிம்ஹம் -என்றுமாம்  –

நீ யிடந்த தூன் –
வணங்காமையாலே அவனுக்கு ஹிதமாக இடந்தான்
ஆத்மாவுக்கு ஸ்வபாவம் வணக்கமே இ றே
தொழும் இவள் -திருவாய்மொழி -6-5-1-
ப்ரஹ்வாஞ்ஜலி புடஸ்த்தித்த
நம இத்யேவ வாதின  –
கைகேயி தோற்றினாப் போலே இ றே உடம்பு –

நீ அவனுடைய மார்பைப் பிளந்தது
நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே அன்று இ றே -என்றபடி –

———————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: