முதல் திருவந்தாதி-பாசுரம் -/87-88 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆனபின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
-அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

இனியார் புகுவார் எழு நரக வாசல் –
எழு நரக வாசல் –இனியார் புகுவார் –
எழுவகைப் பட்டிருந்த நரகவாசல் இனி யார் போய்ப் புகுவார் –
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –
அன்றிக்கே
எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-

முனியாது-
யமபடருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை -என்கிறது -எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே –
முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளாவும் பட்டது படும் அத்தனை –

மூரித்தாள் கோமின் –
பெரும் தாளைப் பூட்டுங்கோள்-
அதுக்கடி இன்னம் ஒருகால் திறக்கும் என்னும்படி இருக்கில் இ றே எளிதாகக் கோர்க்க வேண்டுவது –

கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –
கனிகள்
உதிரும்படிக்கு ஈடாகக் கன்றை எறிந்த தோளை உடையவனானவனுடைய ஆபரணத்தால் வந்த த்வனியை
யுடைத்தான திருவடிகளைக் காண்பதற்கு –
அதாகிறது -இலக்கைக் குறித்து எறிகிற போது மாறியிட்ட திருவடிகளில் வீரக் கழல் த்வநிக்கிற படி –

நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —
நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது -திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இ றே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின-திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –

நாவலம் சூழ் நாடு –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

—————————————————————————————————–

அவதாரிகை –

கீழே -நன்கறிந்த நாவலம் சூழ் நாடு -என்றாரே
அதாகிறது –
திருக் கோவலூருக்கு உட்பட்ட பூமிக்கு உள்ளே கிடந்தமையைக் கொண்டு இ றே
அத்தை நாடும் அறிந்து பற்றப் பெற்றது இல்லை
அவன் படிக்கு இஸ் சம்சாரிகள் படியைப் பார்த்தால் யமனுக்கும் அவகாசம் உண்டாய் இருந்தது
தேன மைத்ரீ பவது தே -சுந்தர -21-20-
அனந்தரம்
தம்மைப் பார்த்து
நாடு செய்தபடி செய்ய
நாம் முந்துற முன்னம்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் -திருவாய்மொழி -1-2-8-என்கிறபடியே
என்னுடைய கரணங்கள் மூன்றையும் கொண்டு இங்கே
ப்ரவணனாகப் பெற்றேனே -என்கிறார்
வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே
என்கிறார் –

——————————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு ——-88-

———————————————————————————

வியாக்யானம் –

நாடிலும் நின்னடியே நாடுவன் –
நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும்
உன் திருவடிகளையே தேடுவன் –

நாடோறும் பாடிலும்  நின் புகழே பாடுவன் –
நித்யமாக ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும்
தேவருடைய புகழே ஸ்தோத்ரம் பண்ணா நிற்பன் –
இவை தானே பிரயோஜனமாக -என்கிறது -ஏவ காரத்தாலே –
சூடிலும்  பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு –
நான் என் தலையாலே தரிக்குமவையும்
தர்ச நீயமான திருவாழியை ஏந்தின சர்வேஸ்வரனான
உன்னுடைய ச்ப்ருஹணீயமான
திருவடிகளையே தரிக்கக் கடவேனான -எனக்கு –

என்னாகில் என்னே எனக்கு –
இங்கே தாகில் என்
பரமபதத்திலே போனாலும் மநோ வாக் காயங்கள் அங்கே
ப்ரவணமாகை இ றே செய்வது
அது இங்கே பெற்றேனாகில்
எனக்கு எங்கே இருக்க நல்லது -என்றதாகவுமாம் –
அன்றிக்கே
நாட்டார்க்காக இருந்து வ்யசனப் பட்டால் பிரயோஜனம் உண்டோ
அறிந்தார்கள் ஆகில் இந்த லாபத்தைப் பெறுகிறார்கள்
அறிந்திலர்கள் ஆகில் இந்தப் பேற்றை இழக்கிறார்கள்
பேறு அவனாலே ஆனவோபாதி
இழவும் தம்மாலே யாவும் கடவது இ றே
நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்
நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ
நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே என்னும்
லாபத்தோடு தலைக் கட்டுகிறார் –

——————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: