முதல் திருவந்தாதி-பாசுரம் -86 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து
அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவர் இருந்த இடத்திலே
பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –
இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லைஇ றே என்ன
தரியான் இ றே அவன்   –

———————————————————————————-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

————————————————————————————–

வியாக்யானம் –

நீயும் திருமகளும் நின்றாயால் –
என்னடியார் அது செய்யார் என்னும் நீயும்
நினைவறிந்து கார்யம் செய்வாரை
ந கச்சின் ந அபராத்யாதி -என்னும் அவளும் கூட நின்றாயால் –
ஆஸ்ரித ரஷணத்தில் முறபாடனான நீயும்
ராகவஞ்ச மகா வ்ரதம் -அயோத்யா -31-2-என்று வ்ரதம் கொண்டு இ றே புறப்பட்டது
ஆக்ரா தச்தே கமிஷ்யாமி -அயோத்யா -27-6- என்று உனக்கு முற்பட்ட பிராட்டியும்

நின்றாயால் –
நிற்கக் கண்ட அத்தனை
நிர் ஹே துகம் -என்றபடி
அன்றிக்கே
இவர்களைப் பெற்று நிலை நின்ற படி -ஆகவுமாம் –

குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
ஒரு மலையை எடுத்து
உடம்பிலே வந்து படுகிற மழையை பரிஹரித்த நீர்மையை உடையவனே  –
அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இ றே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத  படி -என்றுமாம்
குஹேன சஹி தோ ராம -பால -1-28- என்னக் கடவது இ றே  –

வாசல் கடை கழியா யுள் புகாக் –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்
புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு
பச்ம தத் குருதாம் ஸிகீ-அயோத்யா -97-8-என்றான் இ றே
கீழே இருவரையும் கூ-நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –

காமர் பூங்கோவல்இடை கழியே பற்றி இனி —
ச்ப்ருஹநீயமாய்
அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி
இப்போது இப்படி நின்றான் -என்னுதல்
இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்
இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக்கடவது இ றே-
திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது -தன கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இ றே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க வி றே –
ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இ றே –

————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: