முதல் திருவந்தாதி-பாசுரம் -82 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது
அவனைக் கண்டு சொல்ல வேணுமே
அவனைஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே
என்றவர்க்குக் குறை தீரும்படி
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

——————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோருநாள்
மானமாய வெய்தான் வரை ——-82-

—————————————————————————————

வியாக்யானம் –

படையாரும் வாள் கண்ணார்-
வேல் போலேயாய்
ஒளியை உடைத்தான கண்களை உடைய பெண்கள் ஆனவர்கள் –
படை என்று வாளையும் சொல்லக் கடவது –
தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்குமவர்கள் -என்கை –

பாரசிநாள் –
த்வாதசி நாளிலே –

பைம்பூம் தொடையலோ டேந்திய தூபம் –
பருவத்தால் வந்த இளமை கொண்டு புறம்பு
அந்ய பரத்தை பண்ணலாய் இருக்கச் செய்தே
அது தவிர்ந்து -பகவத் பஜனமே யாம்படி பண்ணிக் கொள்ள வற்றாய்த்து
அத்தேச ஸ்வ பாவம் தான் –
இவர்களிலே தாம்தாம் கைகளிலே தரித்துக் கொண்டு நிற்க
அழகியதாய்த் தொடுத்த மாலைகளும் தூபங்களும் –

இடையிடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே –
நடு நடுவே ஒரோ நஷத்ரங்களை யுடைத்தான ஆகாசத்தை இவை சென்று
மாசூணப் பண்ணா நின்றது
மரியா நின்றது
இவர்கள் புகைத்த தூபமானது ஆகாசத்தை மறைக்கும்
இவர்கள் கைகளில் செறிந்த மாலைகளானவை நஷத்ரங்களை மறைக்கும் –

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை –
அப்படி பஜிக்கிற ஸ்திரீகளுக்கும் பிராட்டி திறத்தில் போலவே
பரதந்த்ரனாய்க் கார்யம் செய்யுமாய்த்து
அவள் சொல்லப் பண்டு ஒரு நாள் மாயா மிருகத்தின் பின்னே போய் அத்தை வதித்தான் இ றே
அப்படிப் பட்ட ஆஸ்ரித பரதந்த்ரன் வர்த்திக்கிற தேசம் வேங்கடமே –

இப்பாட்டால் சர்வ சமாஸ்ரயணீயத்வமும்
சௌலப்யமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
போக்யதையும்
விரோதி நிரசனமும்
குறை வற்று வர்த்திக்கிற தேசம்
என்கிறது –

——————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: