முதல் திருவந்தாதி-பாசுரம் -81 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம்
பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை
என்றொரு பேர் உண்டோ –
அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –
ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் –

————————————————————————————

ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடை ந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை ——–81-

—————————————————————————————

வியாக்யானம் –

ஆளமர் வென்றி யடுகளத்துள் –
ஆளாலே அமர் பட்டு இருப்பதாய்
ஆளோடு ஆள் மிடைந்து இருப்பதாய்
வென்றியை உடைத்தான –

ஆடு களத்து –
முடிக்கிற களத்து –

அஞ்ஞான்று –
அசுரர் தேவர்களை முறித்து வாயிலிட்டுச் செல்லுகிற
அற்றை நாளிலே –

வாளமர் வேண்டி  –
ஒளியை யுடைத்தாய் இருப்பது ஒரு யுத்தம் வேணும் என்று பார்த்து
அதாகிறது
தேவர்களும் அசூரர்களும் ஆகப் பொரா நிற்க
அசூரர்களுக்கு பலம் மிகுத்து
தேவர்களுக்கு பலம் குறைந்து பட்டுக் கிடக்கப் புக்க வாறே
அனுகூலரான நம்முடையார்க்கு மதிப்பு உடைத்தாய் இருப்பதொரு பூசல் வேணும் என்று பார்த்தான் –

வரை நட்டு நீளவரைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே –
அதற்க்குக் கைம்முதல் வேணுமே
ஆழ்ந்த நீரிலே ஆளக் கடவ மந்த்ரத்தை
பிடுங்கிக் கொண்டு வந்து நட்டு
மிருதுவான வாசுகியைச் சுற்றி
மகாத் தத்வமான கடலைக் கலக்கினான் யாய்த்து –
அது வி றே
தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை –
கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய
திரு நாமமே அன்றோ
பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும்
எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –

பற்றிக் கடத்தும் படை –
அள்ளி எடுத்துக் கொண்டு போய்
பரம பதத்திலே வைக்கும் பரிகரம்-
எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள்
கரையிலே முதலி களை வைத்தால் போலே பரம பதத்திலே வைத்து
தாச்யாம்ருத தத்தைக்  கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
த்வா மேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண -ஜிதந்தே -4-என்னக் கடவது இ றே –

சம்சார சாகரத்தைக் கடத்தும் படை
நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான்
பெயர் அன்றே
என்று அந்வயம் –

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: