முதல் திருவந்தாதி-பாசுரம் -80 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

மகா பலி பக்கல் நின்றும் விபூதியை மீட்டுக் கொண்டு நோக்கின் அவ்வளவே அன்றிக்கே
ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும்
ந ஷமாமி -என்கிறத்தைப்   பாராதே அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் –
என்கிறது –
அதாகிறது
பாதாளத்திலே ஸூ முகன் என்றொரு சர்ப்பமாய்
அவனைப் பெரிய திருவடி ஆமிஷமாகக் கணிசித்து இருக்க
அத்தைக் கேட்டு அஞ்சி
சர்வேஸ்வரன் இந்திர லோகத்திலே உபேந்திர மூர்த்தியாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்க
அங்கே சென்று அவன் எழுந்து அருளி இருந்த சிம்ஹாசனத்திலே சுற்றிக் கொண்டு கிடந்தான் ஆயத்து –
சரணம் புகுவார்க்கு லஷணம்
பவத் விஷய வாசின -ஆரண்ய -1-20-என்னும் இவ்வளவே இ றே
பெரிய திருவடி அங்கே சென்று காணாமே பெரிய வேகத்தோடு இங்கே இவன் இருந்த படியைக் கண்டு
அந்தரங்கராய் வஹிக்குமவர்கள் பொதுவாகச் சில சொல்லுமா போலே சொல்ல
சர்வேஸ்வரனும் அத்தைக் கேட்டுப் பின்னையும் அவனை விட்டே சமாதனத்தைப் பண்ணி அவன் கையிலே காட்டிக் கொடுக்க
அவனும் அத்தை ஆபரணமாக உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கிக் கொடுத்த படி
சொல்லுகிறது –

————————————————————————————

அடுத்த கடும்பகை ஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் ——80-

——————————————————————————————-

வியாக்யானம் –

அடுத்த கடும்பகைஞற்கு –
அண்ணிய பகை யாய்த்து –
ஜன்மத வந்த சாத்ரவம் ஆயத்து
அதாகிறது
இவருடைய தாய்மார்க்கும் சாபத்ன்யத்தால் வந்ததொரு விரோதம் உண்டாய்த்து
கடும் பகை –
பேர் சொல்ல-
முடியும் படி கொடியதாய் இருக்கை-

ஆற்றேன் என்றோடி –
அவனுக்கு ஆற்ற மாட்டேன் -என்று ஓடி
சடக்கென வந்தான் ஆயத்து –

படுத்த பெரும் பாழி சூழ்ந்த –
அங்குத்தைக்கு ஈடாம்படி படுத்த சிம்ஹாசனத்தைச் சுற்றின
பாயலும் பள்ளியும் பாழியும் பாசியும் படுக்கையும் சேர்க்கைக்கு பேர் –

விடத் தரவை –
ஒரு சம தமாத் யுபேதனைத் தான் நோக்கப் பெற்றதோ –
சத்ரு வச்யமான கோடியில் உள்ளது ஒன்றாகிலும்
தர்ம ருசி உண்டாய் இருப்பாரையும் கிடைக்கும் இ றே
அப்படிப் பட்டான் ஒருவனும் அன்று -என்கை-
சர்ப்ப ஜாதி ரியம் க்ரூரா-என்னக் கடவது இ றே
சரண்யனுக்கு  கிருபா விஷயம் அன்று  -என்கிறது –
வல்லாளன் கை கொடுத்த –
சரணாகத பரித்ராணத்தில் இவனத்தனை சமர்த்தன் இல்லை யாய்த்து
பின்னை அவன் கையிலே கொடுத்து அவனை இடுவித்தே நோக்குவித்தான் ஆயத்து
கடித்த வாயாலே தீர்க்கை
வத்யதாம்-யுத்த -17-29- -என்றவரை
அஸ்மாபிஸ் துல்யோ பவது -18-38–என்னப் பண்ணினால் போலே –
ந ஷமாமி -என்றத்தையும் ந த்யஜேயம் -என்றத்தையும் ஒக்க ஜீவிப்பித்த படி –

மா மேனி-
அவனை நோக்கின பின்பு வடிவில் பிறந்த
பௌஷ்கல்யம்
ததா ராம க்ருதக்ருத்ய -பால -1-83-

மாயவனுக்கு –
இவனுக்கு ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம்
அவனால் எல்லை கண்டு மீளப் போகாதாய்த்து –

அல்லாது மாவரோ ஆள் –
ஒருக்கால் ஆளாய் அடிமை புக்கே பின்னையும்
ஸ்வ ரஷணத்துக்குத் தான் இருந்து முந்திக் கொள்ள வேண்டும்படியாய் இருப்பாரையும்
பற்றுவார்களோ
சரணம் என்றொரு உக்தி மாதரம் சொன்னால்
பின்னை மேலுள்ளதனை தன் தலையிலே
ஏறிட்டுக் கொண்டு நோக்குமவனை யன்றோ பற்ற அடுப்பது –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27-

————————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: