முதல் திருவந்தாதி-பாசுரம் -76 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ
உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார்
தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல்
ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு
என்கிறார் –
பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை
என்று இப்பாட்டை எம்பார் எப்போதும்
அனுசந்தித்து இருப்பர்-

—————————————————————————-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் ———76-

——————————————————————————

வியாக்யானம் –

வழி நின்று நின்னைத் தொழுவார் –
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் சொல்லுகிறபடியே
வழி பட்டு நின்று உன்னை ஆஸ்ரயிப்பார்-
ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்யோ ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதியாசிதவ்ய –
விஜ்ஞாய ப்டஜ்ஞான் குர்வீத
உபாசனம் த்ருவா நு ஸ்ம்ருதி  தர்சன சமா நாகாராதா பிரத்யஷாபத்தி
விசதே தத நந்தரம்-கீதை-18-55-
என்கிற சாஷாத்கார பர்யந்தமாகச் சொல்லுகிற உபாசனத்திலே நின்று –

வழுவா மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –
ஓன்று தப்பாதபடி யதாபூத வாதியான வேதத்திலே நின்ற மூர்த்தி யுண்டு
அதில் சொல்லுகிற ஸ்வரூபம் –
பரஜ்ஞ்யோதி ரூபா சம்பாத்திய ஸ்வேண  ரூபேணாபி விஷ்பத்யதே –
அத்தைப் பெறுவார்கள் –

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும்-
ப்ராப்யத்தில்  ஆதல்
பிராபகத்திலே ஆதல்
ஒரு கொற்றை வாராமே நித்ய விபூதியைக் கொடுக்கும்
ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –

மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –
அந்த ஸ்வபாவம் உண்டாயிற்று திருமலைக்கு
சீரான் -என்று சம்போதனை
அன்றிக்கே
மண்ணளந்த சீரை உடையவன் திருமலை இப்படிச் செய்யும் எண்ணுதல்
மண் அளந்த சீரானதான திருமலை -என்னுதல்-

திருவேங்கடம் -திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இ றே தருவது –

————————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: