முதல் திருவந்தாதி-பாசுரம் -75 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப்
பெற்றவர்கள் இ றே
விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழிபோனார் ஆகிறார்
என்கிறார் –

—————————————————————————–

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

——————————————————————————–

வியாக்யானம் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –
தர்மஸ்ஸ ஜா நாதி நரச்ய வ்ருத்தம்-என்று
ஈஸ்வரனுக்குப் புரவர் போலே
பதினாலு பேர் உண்டு இ றே –
சூர்யன் -சந்தரன் -காற்று -நெருப்பு -ஆகாயம் -பூமி நீர்
மனம் -யமன் -பகல் இரவு -ப்ராதாஸ் சந்த்யை -சாயம் சந்த்யை -தர்மம் –
இச் சே தனர் செய்யும் கர்மங்களை ஆராயக் கடவர்கள்
அவர்கள் உன்னை அனுசந்திக்க
விட்டுக் கடக்க நிற்பார்கள்
அவனுடையாரை நோக்கக் கடவன் அவனே யன்றோ -நாம் என்-என்று கடக்க நிற்பார்கள் –
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம்   -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -3-7-4-
தேவர்ஷி பூதாப்த -பாகவதம் -11-5-41-இத்யாதி –

கர்ம வச்யனாகை இ றே இவர்கள் காக்கைக்கு அடி
அது போம்படி சொல்லுகிறது
அருவினைகள் ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –
ஆக்கை புகுகைக்கு அடியான
அவித்யாதிகளால் உண்டான பந்தங்கள் எல்லாம் உன்னை அனுசந்திக்க தாமே கழன்று போம் –

மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை –
காப்பும் அருவினையும் போன அதிகாரிக்கு மூப்பாவது கைவல்யம்
அன்றிக்கே
பிறந்தான் இறந்தான் என்று சொல்லக் கடவ ஷட் பாவ விகாரங்கள் வந்து கிட்டா –
திரு மாலே –
இவை எல்லாம் வந்து கிட்டாமைக்கு அடி இருக்கிறபடி
ஈஸ்வரன் ஸ்வாதந்த்ர்யத்தாலே ஆராயப் புக்காலும்
பிராயச்சித்த சாத்யம் அல்லாத பாபம் நாம் பொறுக்கும் அத்தனை யன்றோ என்று ஆற்றுவாள் ஒருத்தி
அருகே உண்டு என்கிறது
தாஸீ நாம் ராவணஸ் யாஹம்  -யுத்த் -113-41-
ராஜ சம்ச்றைய வச்யா நாம் –யுத்த -113-38-
என்னும்படியே தன்னைக் கழிக்குமோ பாதி
பிராப்யானாம் போது பிராட்டி கூட வேணும் –

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி  –
தேவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் இ றே நல் வழி போனார் ஆகிறார்
வழி என்று அர்ச்சிராதி  கதியைச் சொல்லிற்று ஆகவுமாம்  –
பரமபதம் போலே இ றே பரமபததுக்கு போம் வழி
வந்தியாருக்கு முள்ளும் முடுக்குமான வழி

மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே –
யுவா குமாரா
யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிற
உங்களை ஆஸ்ரயித்தால் உங்களைப் போலே பரம சாம்யம் உபைதி இ றே –

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: