முதல் திருவந்தாதி-பாசுரம் -74 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவனை ஒழிய வேறு ஆஸ்ரயணீயர் இல்லை என்னா நின்றீர்
என் தான் –
ருத்ரன் ஆஸ்ரயணீயன் அன்றோ -என்னில்
அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன்
என்கிறார் –
உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு
அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்
இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

———————————————————————————

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

———————————————————————————–

வியாக்யானம் –

ஏற்றான்-

ருஷப வாஹனன் என்று பிரசித்தமாய் இருப்பதொரு
எருத்தை வாகனமாக உடையனாய் இருக்கும் அவன் –

புள்ளூர்ந்தான் –
வேதாத்மாவான பெரிய திருவடியைத் தனக்கு வாகனமாக
உடையனாய் இருக்கும் இவன்

எயில் எரித்தான் –
திரிபுர தஹனம் பண்ணினேன் என்று ஆஸ்ரிதரை ஒரு வ்யாஜத்தாலே அளிக்கும் அவன்

மார்விடந்தான் –
ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னை அழிய மாறி
அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனாய் இருக்கும் இவன் –

நீற்றான் –
பஸ்மச் சந்த -என்று பஸ்மத்தைத் தரித்து
பிராயச் சித்த வேஷியாய் இருக்கும் அவன் –

நிழல் மணி வண்ணத்தான் –
கண்டார்க்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கும் இவன் –

கூற்றொரு பால் மங்கையான் –
அருளே ஒரு ஸ்திரீயை வைத்து
அத்தால் வந்த அபிமானத்தை யுடையனாய் இருக்கும் அவன் –

பூ மகளான் –
அசயே ஸா   நா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்னும் இவளைத் தனக்கு என உடையனான
ஸ்ரீ யபதியாய் இருக்கும் இவன் –

வார் சடையான் –
சாதனா வேஷத்துக்கு ஈடாக தாழ்ந்த ஜடையை உடையனாய்
இருக்கும் அவன் –

நீண் முடியான் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தை யுடையனாய் இருக்கும் இவன்

கங்கையான் –
தனக்கு சுத்திக்கு ஈடாக
கங்கையைத் தரித்துக் கொண்டு இருக்கும் -அவன்

நீள் கழலான்-
அந்த தீர்த்த பூதையான கங்கையை உத்பாதித்துக் கொடுக்கும்
திருவடிகளை உடையவன் இவன் –

காப்பு  –
ஏற்றான்
எயில் எரித்தான்
நீற்றான்
கூற்றொரு பால் மங்கையான்
வார் சடையான்
கங்கை யானானவன்
புள்ளூர்ந்தான்
மார்விடந்தான்
நிழல் மணி வண்ணத்தான்
பூ மகளான்
நீண் முடியான்
நீள் கழலான்
ஆனவனுடைய காப்பு -ரஷை என்றபடி –

————————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: