முதல் திருவந்தாதி-பாசுரம் -73 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவை மத்யஸ்தமாம் படி
தாம் அவ்விஷயத்திலே
ப்ரவணரான படி
சொல்லுகிறது –

———————————————————————————

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

——————————————————————————–

வியாக்யானம் –

புகழ்வாய் பழிப்பாய் நீ –
வாக்குத் தனக்கடைத்த காரியத்தைக் கொள்ளிலும் கொள்
அன்றிக்கே
ப ழிக்கிலும் பழி –

பூந்துழா  யானை –
புகழ்ந்து அல்லது நிற்க ஒண்ணாத விஷயம் –

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே –
விஷயம் இருந்தபடி கண்டாய் இ றே
இப்பொகடு சரக்கை அநாதரிக்கிலும் அநாதரி-
ஆதரிக்கிலும் ஆதரி
புகழ்வாய் என்கிறது மனசை
நெஞ்சே உனக்கு இவற்றில் நல்லது  தெரியும்   இ றே

திகழ் நீர்க் -இத்யாதி
நீ முன்னம் செய்தபடி செய்
புறம்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –
என்கிறார் –

திகழ் நீர்க்கடலும் மலையும் –
இரண்டாலுமாகக் காரியத்தைச் சொல்லுகிறது –

இருவிசும்பும் காற்றும் –
காரணமான பூதங்களுக்கும் உப லஷணம்-

உடலும் உயிரும் ஏற்றான் –
இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்
அவன் சேஷி -என்கிறது
யச்யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ஆதாரத்தைப் பற்றிலும் பற்று
ஆதேயத்தைப் பற்றிலும் பற்று
ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

உடலும் உயிரும் ஏற்றான் –
இவை யாகில் தான் என்றபடி –

——————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: