முதல் திருவந்தாதி-பாசுரம் -72 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவருடைய கரணங்கள் ஆனவை
இவருக்கு முன்னே
அங்கே  ப்ரவணமாய்-
ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று
உபதேசிக்கப் புக்கன

குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி –

———————————————————————————

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

பதவுரை

அன்பு—பகவத்ப க்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை–ஸர்வேச்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான
திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப் பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.

—————————————————————————————

வியாக்யானம் –

அன்பாழி  யானை   யணுகு என்னும் –
நெஞ்சு சென்ற கடல் ஸ்தானத்திலே அன்பு என்னலாம் படி காணும் சமைந்த படி
நெஞ்சானது சர்வேஸ்வரனைக் கிட்டு என்னும்

அடலாழி கொண்டான் மாட்டு அன்பு விடாதே கொள் என்று
தம்முடைய திரு உள்ளத்தை இரக்க
அதுவும் நீர் ஆழியானை விடாதே கொள்ளும்-என்கிறது

நா வவன் தன் பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும்-
ராஜ புத்ரர்கள் இடைச் சேரிக்கும் கடைச் சேரிக்கும் அகப்படுமா போலே
என்னுடைய நாவானது
அவனுடைய நீர்மையையும் மிடுக்கையும் உடைத்தான தோளை
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணா  நிற்கும்

அன்றிக்கே
சௌந்தர்ய சாகரமான தோள் என்னவுமாம்

முன்பூழி காணானைக் காண் என்னும் கண் –
முடியும் முடியாது என்று அறியாது காணும் என்னுடைய கண்கள் ஆனவை
முன்பூழி காணானைக் காண் என்னா நிற்கும்

நாம் சாபராதரர் அன்றோ
எங்கனே கிட்டும்படி என்ன
அது வேண்டா காணும்

அபராதம் பண்ணிட்டு வைத்த காலத்தையும் மறக்கும் -என்னும்
காலத்தை நினைத்தான் ஆகில்
தத்த்வாரா அபராதமும் ச்ம்ருதமாம் இறே

அந்த அபராதமே அன்றிக்கே
பண்ணின நாளையும் மறக்கும் யாய்த்து

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் -என்னும் -திருவாய் மொழி -2-7-3-

கண்டவாறே தெரியும் இறே சீறி நோக்கும் நோக்கும்
வாத்சல்யத்தாலே நோக்கும் நோக்கும் –

செவி கேள் என்னும் –
செவியானது குற்றம் பார்த்து  பொறானாகிலும்
விடப் போகாத ஆபரண சோபையை யுடையனானவன்
புகழைக் கேளாது
இருக்கிறது என் என்னா நிற்கும் –

பூணாரம் –
ஆபரணமான உடம்புக்கு ஆபரணம்
சர்வ பூஷண பூஷார்ஹா –

பூண்டான்-
பூண வல்ல அழகு –

புகழ்   –
ஆத்ம பூஷணம் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: