Archive for June, 2014

முதல் திருவந்தாதி-பாசுரம் -61 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

ஆக இவனை ஒழிய இவை தம்தாமுக்கு ஹிதம் அறியா -என்றது கீழ்
இதில்
அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ
என்கிறார் –
ஹிதம் அறியாமையே அல்ல
தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள்
என்கிறது –

———————————————————————————

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

————————————————————————————–

வியாக்யானம் –

உலகும்-
லோகங்களும் –
லோக அந்தர்வர்த்தியாய் உள்ள பதார்ந்தங்கள் -ஆகவுமாம்-

உலகிறந்த ஊழியும் –
லோகங்கள் அடங்கலும் அழிந்து   காலமே சேஷித்த அற்றைக் காலமும்
காலோ பலஷித ஸூ ஷ்ம பதார்த்தங்கள் ஆகவுமாம் –

ஒண் கேழ்   விலகு கருங்கடலும் வெற்பும் –
அழகிய நிறத்தை உடைத்தாய்
அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும்
வெற்பும் -பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களும்

உலகினில் -செந்தீயும் மாருதமும் வானும் –
இத்தால் காரண பதார்த்தங்களைச் சொல்லிற்று ஆதல்
கார்யங்களில் ஏக தேசத்தைச் சொல்லிற்று ஆதல்
இவை எல்லாம் –

திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு –
இவை அடங்கலும்
பிராட்டியும் தானும் லீலா ரசம் அநுபவிக்கும் படியாய் இருக்கிறது
அவளுக்குப் பிரியமாகத்
தன் திரு உள்ளத்தாலே சங்கல்ப்பித்தவை இவை
உபாய உபேயத்வே ததி ஹிதவ தத்தவம் ந து குனௌ-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-88-என்கிறபடியே
உபாய உபேயங்களாகை அவனுக்கு ஸ்வரூபம்
குணாய அன்று
சத்தைக்கு நாம் கூட்டுப் படுமன்று
உபாயத்வத்துக்கு சஹாயாந்தரங்கள் வேண்டுவது
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமாலை–திருவாய்மொழி -2-7-8-

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -60 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

ஒருவன் பல போக்தாவாய் இருக்க
ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் –
அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி
அறியாதவனால் செய்யலாவது உண்டோ
என்கிறார் –
சேதனர் கீழே போய்த்தும்
தாங்கள் படுகிறதும்
மேல் வரக் கடவதும்
அறியார்கள்
சர்வேஸ்வரன்
பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று
இவர்கள் கீழ்ப் பட்டதும்
இப்போது படுகிறதும்
மேல் படக் கடவதும்
எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே
அவனே உபாயமாம் இத்தனை இறே –

—————————————————————————————-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

——————————————————————————————–

வியாக்யானம் –

சரணா மறை பயந்த தாமரை யானோடு –
அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்ததாலே
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ  நம-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக
அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –

மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் –
தாங்கள் நித்தியராய் இருக்கச் செய்தே
மரண தர்மாக்களாய்-செத்தான் பிறந்தான் -என்கிற வ்யவஹாரத்துக்கு

யோக்யதையை உடையராய் இருந்துள்ள  சேதனர்க்கு எல்லாம் கல்பாதியிலே உண்டாய்
கல்பாந்ததிலே இல்லை யாகிற ப்ர்ஹ்மாவோடு
ஜாயதே ம்ரியதே -என்று
தோற்றி மாய்கிறவர்களோடு வாசி இல்லை
அடைய அஞ்ஞரும் அசக்தரும்  –
அரணாய –
அரணானவை
ரஷையானவை –

பேராழி கொண்ட பிரான் அன்றி –
ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான
உபகாரகனை யல்லது –

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த வுலகு –
கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று
அறிவுடையாரை இட்டு இ றே லோகத்தைச் சொல்லுவது
அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது
ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது

இத்தால்
அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி
சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை
மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்
மூடோயம் நாபி ஜா நாதி –
ஆப்பான் ஜீயரைக் கேட்க
பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
பட்டர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
அன்றிக்கே
கீழ்ச் சொன்ன தசரதாத் மஜனையே சொல்ல வேண்டில்
பேராழி கொண்ட -என்ற இடத்தை
கடலை வெதுப்பி வசம் ஆக்கினவன் என்று ஆக்கிக் கொள்வது-

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -59 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்
விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில்
தசரதாத் மஜனை சரணம் புகு
என்கிறார் –

—————————————————————–

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

————————————————————————-

வியாக்யானம் –

அடைந்த வருவினையோ –
ஜ்ஞான ஆனந்த லஷணமாய்
நித்தியமாய்
ஏக ரூபமாய்
இருக்கிற ஆத்மாவை அசித் சம்சர்க்கம் அடியாக வந்து பற்றி
விடாதே
ப்ரவாஹ ரூபத்தாலே
நித்தியமாய் வருகிற பாபங்கள் –
ஆத்மா ஹேய சம்சர்க்க அனர்ஹனாகையாலே அடைந்தது என்றது
பரமாத்மாவுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே
அவன் அநசனாய் இருக்கும் –

அல்லல் நோய் பாவம் –
அது அடியாக வருகிற
ஆதி மானஸ துக்கங்கள் -அல்லல்
சாரீரகமான வியாதி -நோய்
பரிக்ரஹித்த சரீரத்தைக் கொண்டு பண்ணுகிற நிஷித்தாசரணம் -பாவம் –

மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில்-
இவையாய்க் கொண்டு ஆத்மாவைத் தோற்றாத படி நேர்க்கிக் கிடக்கிறவை
வாசனையோடு விட்டுப் போக வேண்டில் –
சரீராரம்ப  ஹேதுக்களான பாபங்களும் பரிக்ரஹித்த சரீரத்தால் பிறந்த பாபங்களும்
சமிதை இடா  மாணியைப் போலேயும்
பரணிக் கூடு வரிந்தால் போலேயும் மிடைந்து அடைந்த -என்று கீழே கூட்டுவது
வந்தேறியாகில் இ றே மீள பிராப்தி யுள்ளது –
மீண்டு ஒழிய வேண்டில்
தொடருகிற பாம்பைத் திரிய விடுவித்தால் போலே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-இ றே
ஒரு ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில் –

நுடங்கிடையை –
சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ
பெருமாளுக்கு ஷண  காலமும் பிரியத் தகாத படி யானவளை
ஏக த்ரவ்யத்தைப் பின்னம் ஆக்கினாப் போலே

முன்னிலங்கை வைத்தான் –
பண்டு இலங்கையிலே இருப்பாக்கினான்
அனந்யார்ஹம் ஆனவளை இறே பிரித்து இரண்டு இடத்திலே யாக்கிற்று –

முரண் அழிய –
தாயையும் தமப்பனையும் பிரித்தவன் உடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக –

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண் –
பண்டு ஒரு நாள் தன் வில்லை அழகிய கையிலே வைத்தவன் உபாயம்
அன்றிக்கே
அவனை உபாயமாகப் பெற்றேன் -என்றதாகவுமாம் –
அவன் முன்பே யத்னம் பண்ணா நின்றான்
பிரதிபத்தியே யுள்ளது
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -30-30-என்று
அம்பின் கூர்மையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
இத்தால் தன்னைப் பற்றி இருப்பார்க்கு பிராட்டியோடு ஒக்கப் பரிந்து கார்யம் செய்யும் என்னும் இடத்தையும்
அப்பிராட்டி அம்பு எய்யும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம்   உள்ளது என்னும் இடத்தையும்
நம் அபேஷிதங்கள் செய்விக்கைக்கு அவள் புருஷகாரம் என்கையும்
அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணன் பட்டது படுவார் என்னும் இடத்தையும்
சொல்லுகிறது

இப்பாட்டுக்கு வாக்யார்த்தம் –
கீழே இந்திரிய ஜெயம்  பண்ணு என்றது
தொழு என்றது
திரு நாமம் சொல் என்றது
நினை என்றது
என்றதாகப் பல படிகளை சொல்லிற்று –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட்க த்ரயத்தில் வார்த்தை போலே ஸ்வரூபம் விசதமாகைக்குச் சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே
உணர்ந்த வன்று அவனல்லது இல்லை –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -58 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

ஆனபின்பு -அவ்விஷயத்தை விட்டு
நெஞ்சே
நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய்
என்கிறார் –

——————————————————————————–

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

———————————————————————————

வியாக்யானம் –

தொழுது –
அஞ்சலி பண்ணி

மலர் கொண்டு –
அழகிய செவ்விப் பூவைக் கொண்டு –

தூபம் கையேந்தி –
தூபத்தைக் கையாலே தரித்து –

எழுதும் –
உஜ்ஜீவிப்போ ம்

எழு-
கடுக எழுந்திரு
ஒருப்படு –

வாழி நெஞ்சே-
நெஞ்சே -உனக்கு இந்த சம்ருத்தி நித்யமாக செல்லுக –

பழுதின்றி –
குருகுல வாஸம் பண்ணிப் பழுது விழக் காண்கை –
முதலிலே சொல்லில் உத்பத்தி தோஷமேயாய் ஆயிற்று இ றே
கிடந்தானை கண்டேறுகை அன்றிக்கே
சந்தை இட்டுக் கற்கை –

பழுதின்றி -மந்திரங்கள் கற்பனவும் -மாலடியே கை தொழுவான் –
நாம் திரு மந்த்ரம் தன்னில் வாசனை பண்ணுகிறது
பழுதின்றி மாலடியிலே   கை தொழுகைக்காக –
விச்சேத சங்கை வாராத படி சர்வேஸ்வரன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்காக

அந்தரம் ஒன்றில்லை யடை-
ஆனபின்பு நமக்கு ஆறி இருக்க அவசரம் இல்லை
கடுகச் சென்று கிட்டு –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -57 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

ப்ரஹ்மா அறிய மாட்டான் ஆகில் நீர் பின்னை அறிந்த படி எங்கனே என்னில்
திரு நாம த்வாரா அவனை ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்
என்கிறார் –
சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பது அவனைப் பற்றி என்னும் இடமும் –
அறிந்தேன்
என்கிறார்  –

———————————————————————————–

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

———————————————————————————–

வியாக்யானம் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் –
புக்கிடம் புக்கு வடிம்பிட்டு நலியக் கடவதான
பாபத்துக்கு பயப்பட்டேன்
அன்றிக்கே
ஜ்ஞானம் பிறந்த பின்பு இவரை விட்டுக் கடக்க நின்றது ஆய்த்து பாபம்
இது இன்னம் வந்து மேலிடில் செய்வது என் என்று அஞ்சினேன் -என்கிறார் ஆகவுமாம் –
பாபத்துக்கு அடியான தேகம் கிடக்கையாலே பின்னையும் வந்து மேலிடில் செய்வது என் என்று
அஞ்சக் குறை இல்லை என்று அஞ்சினேன் என்கிறார் ஆகவுமாம் –

அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்-
அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்குப்
பின்பு பய ஸ்தானம் இல்லாதபடி
உன் திருவடிகளிலே கிட்டுகைக்காக
வல்லேனாய்ப் பேசினேன் அல்லேன்
ஆற்றாமையாலே உளன் ஆகைக்காகப் பேசினேன் –

நய நின்ற நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன் தொழுது –
நீர்மை யுடைத்தான -என்னுதல்
அன்றிக்கே
நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர்வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு
அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-

சொன்மாலை கற்றேன் தொழுது –
சொல் தொடை கற்றேன்
அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்   –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -56 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

பேராயர்க்கு ஆட்படுகை யாவது அவன் விஷயீ கரிக்கப் புக்கால்
தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது சர்வேஸ்வரன் உடைய பிரபாவம்
ஒருவரால் பரிச்சேதிக்க ஒண்ணாது கிடீர்
என்கிறார் –

——————————————————————————

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

———————————————————————————–

வியாக்யானம் –

பேரேவரப் பிதற்ற லல்லால் –
ஏதேனும் ஒன்றைச் சொல்ல நினைத்தால்
திரு நாமம் வாயிலே வரும்படி வாசனை பண்ணுமது அல்லால்
நாத் தழும்பெழ நாரணா என்று அழைத்து -பெருமாள் திரு மொழி -2-4-என்னக் கடவது இ றே

அங்கன் அன்றிக்கே

அவன் மடுவின் கரையிலே வந்தாப் போலே
வரும்படி திரு நாமங்களை
அக்ரமாகச் சொல்லிக் கூப்பிடும் அது அல்லால் –
எம்பெம்மானை ஆரே யறிவார் –
என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்
இவருக்கு அவன் தானே காட்டின படி –

அது நிற்க –
அவ்விடை யாட்டம் கிடக்கிடீர்

நேரே -இத்யாதி –
அறிவார் கிடகிடீர்
அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –
சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்திலே அவ்யவதா   நேன பிறந்து
அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன்
இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –

கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் –
கடற்கரையிலே குடில்;  கட்டி இருக்கும் காட்டில்
கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ
அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்
அவன் பெரிய கிழாய் கிழாயனாய்
ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3-என்னும் அவனான பின்பு
அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி
ஒருவரால் அறிந்ததே விடப் போமோ
என்கிறார் –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -55 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

அவன் இப்படிக் கண்ணிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு
விரோதிகளைப் போக்கித் தன்னுடையாரை நோக்கா நிற்க
ஆர் தான் இவர்களைக் கண்  கொண்டு சிவக்கப் பார்ப்பார்
என்கிறார் –
யமபடர் ஆராய்கை யாவது என்-என்றபடி –

—————————————————————————

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

——————————————————————————

வியாக்யானம் –

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை
இத்தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –
செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -54 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

அப்படுக்கையும் தள்ளிப் பொகட்டுத்
தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக
இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன்
என்கிறார் –
எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து   பரிமாறும்படி   அவன் ஸ்வரூபம் –
இது நிரைநிரை-என்று கொண்டு லஷணம் இருக்கிறபடி -நிரல் நிரை அணி சேர்ந்தது –

—————————————————————————-

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

—————————————————————

வியாக்யானம் –

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
கரவின்றி விட்டு
இறுத்து
மேய்த்து
ஒசித்து
கீண்டு
கோத்து
ஆடி
உண்டு
அட்டு
எடுத்தனவானவை

அரவம்
அடல் வேழம்
ஆன்
குருந்தம்
புள்வாய்
குரவை
குடம்
முலை
மல்
குன்றம் -என்கிறார் –

காளியன் ஆகிற  அரவத்தை விட்டு
குவலயா பீடத்தை இறுத்து
பசுக்களை மேய்த்து
குருந்தத்தை ஒசித்து
புள்ளைக் கீண்டு
குரவையைக் கோத்து
குடமாடி
பேய் முலை உண்டு
மல்லரை முடித்து
கோவர்த்தனத்தை குடையாக எடுத்து
இது எல்லாம் செய்தான் -அவன் கிடீர்
என்கிறார்
கரவின்றி விட்டு -என்கிறது முடியாதே தப்ப விட்டு -என்னுதல்
அன்றிக்கே
இவற்றை வஞ்சனங்கள் இன்றிக்கே செவ்வே செய்தான் -என்னுதல்
அட்டு எடுத்தன -என்று பாடமான போது
எடுத்தன வென்று பஹூ வசனம்
அப்படுக்கையும் அங்கு உள்ளார் பரிமாற்றத்தையும் விட்டு வந்து கிடீர்
ஆஸ்ரிதர்க்காக இப்பாடு படுகிறது –
அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -இரண்டாம் திருவந்தாதி -15-

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -53 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

கார்ய காலத்திலே வந்து –
பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே –
கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள்
அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது –
எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ்
இதில்
தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு
உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது –

—————————————————————————

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

——————————————————————————–

வியாக்யானம் –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம் –
அவ்வோவபேஷித சமயங்களிலே
அதுக்கு ஈடான வடிவுகளைக் கொண்டு அடிமை செய்யும் படியைச் சொல்லுகிறது –
நான் குடையாக நின்றேன் வந்து ஒதுங்கு -என்கை யாகிறது -சேஷத்வ விரோதி -இறே
எங்கேனும் உலாவும் போதைக்குக் குடையாய் நிற்கை –
கைங்கர்யம் ஸ்வ புத்த்யதீனம் அன்று -என்கிறது
இருப்பு அபேஷிதமான போதைக்கு சிம்ஹாசனமாய் இருக்கும் –

நின்றால் மரவடியாம் –
நிற்கை திரு உள்ளமான போது
பாதுகையாய் இருக்கும்
நின்றால் -நின்ற பின்பு –

நீள் கடலுள் என்றும் புணையாம் –
பரப்பை உடைத்தான கடலிலே திருக் கண் வளர்ந்து அருளும் போதைக்கு
பள்ளி மெத்தையாய் இருக்கும்
புணை -என்று தெப்பமுமாம் –

மணி விளக்காம்-
மங்கள தீபம்
அணி விளக்கு -என்று பாடமான போது
அழகிய தீபம் -என்னவுமாம்
ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்னும் போது
மங்கள தீபமாய் இருக்கும்

பூம் பட்டாம்-
திருப் பரியட்டம் அபேஷிதமான போது
அழகிய பட்டாம்
பும்ஸ்த்வாவஹமாய் இருக்கும் –

புல்கு மணையாம்
சாய்ந்து அருளின போதைக்குத்
தழு வணையாய்  இருக்கும்
பிராட்டிமார் ஊடினால் வ்யசனம் மறப்பிக்க வற்றாகை
ஊடலுக்கு ஹேதுவாஹவுமாம் -இவனை தழு வுவதால் –

இது எல்லாம் ஆர்க்குத் தான் என்னில்
திருமாற்கு
ஒரு மிதுனத்துக்கு
இளைய பெருமாளைப் போலே அந்தரங்க சேவை –

அரவு  –
இது எல்லாம் அழிக்கலாம்-
கட்டிப் பொன் போன்று இருக்கிறபடி –
பிராட்டியும் தானும் கூடத் துகைக்கையால் ஒரு சேதனன் என்று அவர்கள் கூச வேண்டாத படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருக்கும் படி –
ராஜ சந்நிவேசங்களில் கூனர் குறளர் போலே –
இது அங்கு உள்ளார்க்கு எல்லாம் உப லஷணம் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -52 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

ஏன் தான் -இவன் பேர் சொல்லாவிடில் ஜீவிக்கை யரிதோ-
என்னில் நாட்டில் துர்மாநிகளாய்  அதிகாரிகளாய்த்
திரிகிற வர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள்
நிர்வஹித்துக் கொள்ளுகிறது
அவனை ஆஸ்ரயித்துக் காண்
என்கிறார்  –

—————————————————————–

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

————————————————————————

வியாக்யானம் —

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –
அஷ்ட வசூக்களும்
ஏகாதச ருத்ரர்களும்
த்வாதச ஆதித்யர்களும்
அஸ்வினி தேவதைகளுமான
இவர்கள் –

வண்ண மலரேந்தி –
நாநா விதமான புஷ்பங்களை தரித்துக்  கொண்டு –

வைகலும் நண்ணி –
எப்போதும் கிட்டி

ஒரு மாலையால் பரவி-
வி லஷணமான புருஷ ஸூ க்தாதிகளைக் கொண்டு
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி

யோவாது எப்போதும் –
எப்போதும் -விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –

திரு மாலைக் கை தொழுவர் சென்று –
திருமால் -வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி
எல்லாரும் நம் வாசலிலே வரும் இத்தனை -என்று
அபிமானித்து இருக்கக் கடவர்கள்
அவையடங்க அழிந்து
தாங்களே சென்று
ஆஸ்ரயிப்பார்கள்-
தது பர்யபி பாத ராயணஸ்  சம்பவாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25-
தேவர்களுக்கும் பவிஷ்யத்தாய் இருந்துள்ள
அதிகார அர்த்தமாக ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள
பரமாத்மா உபாசனம் விதியா நின்றது இறே –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –