முதல் திருவந்தாதி-பாசுரம் -71 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நாட்டார் செய்த படி செய்கிறார்கள்
நெஞ்சே
நீ இவ் விஷயத்தை விடாதே கிடாய்
என்கிறார்

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் -திருவாய் மொழி -8-10-2-இத்யாதிப் படியே
ஐஸ்வர்ய கைவல்யங்களில்  புகாதே
அவன் தன்னையே பற்று
என்கிறார் –

———————————————————————————

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

————————————————————————————-

நன்று பிணி மூப்புக் கையகற்றி
இத்தால் கைவல்யத்தைச் சொன்னபடி –
அழகிதாக வியாதி தொடக்கமான வற்றை எல்லாம்
கை கழல விடுவது –

நான்கு ஊழி நின்று நிலமுழுது மாண்டாலும் –
கால தத்வம் உள்ளதனையும் நின்று
பூமிப் பரப்பை ஆளப் பெறுவது

இத்தால்
ப்ரஹ்மாதி களுடைய ஐஸ்வர்யத்தைச் சொன்ன படி
கீழ்ச் சொன்ன கைவல்யத்தோடே
இவ் வைஸ்வர்யத்தைப் பெற்றாலும் –

என்றும் விடல் –
ஒரு நாளும் விடாதே கொள்-

ஐஸ்வர்யம் நிலை நில்லாதது
கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம்

ஆகையாலே
இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறது

இவை நன்றான வன்றும்
விடுகைக்கு -அவன் அல்லாமையும்
பற்றுகைக்கு அவனாகையும் அமையும் –

ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் –
பால் குடிக்க இரக்கிறேன் இறே

நீ முற்பட்டு இருக்க
உன்னை இரக்கிறேன் இறே –

அடலாழி கொண்டான் மாட்டன்பு விடல் –
கைக் கூலி கொடுத்துப் பற்ற வேண்டும் விஷயம்
பிரதி பஷத்தின் மேலே சினந்து வாரா நின்றுள்ள
திரு வாழியைக் கையிலே யுடையவன் பக்கல் உண்டான
ஸ்நேஹத்தை விடாதே ஒழிய வேணும்

எனக்கும் உபதேசிக்க வல்ல
அளவுடைய நெஞ்சே   –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: