முதல் திருவந்தாதி-பாசுரம் -67 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

மோஷ இச்சை யுடையவர்களும்
அறிவு தலை நின்றவர்களும்
அவனுடைய திருவடிகளையே ஏத்துவது
திரு நாமங்களை ஓதுவது
என்று சொல்லிற்று -கீழே –
இந்த நிர்பந்தம் வேண்டுவான் என் என்னில்
நாம் தான் அறிவுடையாரை இ றே சொல்லிற்று
அந்த அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீயபதி யல்லது இல்லாமையாலே
என்கிறார் –

———————————————————————————————————————————————-

பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு ———————————-67-

————————————————————————————————————————————————–

வியாக்யானம் –

பெயரும் கருங்கடலே நோக்குமாறு –
ஆறாகில் பூரணமாய் சஞ்சரியா நின்றுள்ள கடலையே
நோக்கக் கடவதாய் இருக்கும்   –
கடலை நிறைக்கப் புகுகிறது இல்லை
புக்கு அல்லது தரிக்க மாட்டாமை –

ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் –
அழகிய பூவானது ஆதித்யன் எத்தனைஎனும்
தூரஸ்தான் ஆகிலும்
அவனையே பார்த்து அவனுக்கு அல்லது அலராது-
கிட்டின நெருப்புக்கு அலர ஒண்ணாது –

உயிரும் தருமனையே நோக்கும் –
சேதன வர்க்கம் அடங்க ப்ராயேண யம வச்யராயே இருக்கக் கடவது
அவனே அவ்விடம் நமக்கு நிலம் அன்று என்று கை வாங்கிப்
போம் இடத்தை ஒழிந்த இடம் எங்கும்
இங்கனே இருக்கக் கடவது  –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
அப்படியே -அறிவாகில்-ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது –
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோன்யதுக்தம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
இவ்வாத்மா வாகிற தாமரைக்கு ஜ்ஞானம் ஆகிற விகாசம் பிறக்கைக்கு பாஸ்கரனும்
பிரபையும் இ றே ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு வ்யாவ்ருத்தம் தான் அத்தலையாலே தோற்றும்  தான் ஒழிய
தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை-
திருவடிகளில் ரேகையும் சாயையும் போலே
நிழலும் அடி தாறும் ஆனோம்  –

——————————————————————————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: