முதல் திருவந்தாதி-பாசுரம் -61 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆக இவனை ஒழிய இவை தம்தாமுக்கு ஹிதம் அறியா -என்றது கீழ்
இதில்
அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ
என்கிறார் –

ஹிதம் அறியாமையே அல்ல
தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள்
என்கிறது –

———————————————————————————

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ் வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ் வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவை யாவும்)
திருமால் தன்–லக்ஷ்மீ பதியான எம்பெருமானுடைய
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

————————————————————————————–

வியாக்யானம் –

உலகும்-
லோகங்களும் –
லோக அந்தர் வர்த்தியாய் உள்ள பதார்ந்தங்கள் -ஆகவுமாம்-

உலகிறந்த ஊழியும் –
லோகங்கள் அடங்கலும் அழிந்து   காலமே சேஷித்த அற்றைக் காலமும்
காலோ பலஷித ஸூஷ்ம பதார்த்தங்கள் ஆகவுமாம் –

ஒண் கேழ் விலகு கருங்கடலும் –
அழகிய நிறத்தை உடைத்தாய்
அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும்

வெற்பும் –
பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களும்

உலகினில் -செந்தீயும் மாருதமும் வானும் –
இத்தால் காரண பதார்த்தங்களைச் சொல்லிற்று ஆதல்
கார்யங்களில் ஏக தேசத்தைச் சொல்லிற்று ஆதல்
இவை எல்லாம் –

திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு –
இவை அடங்கலும்
பிராட்டியும் தானும் லீலா ரசம் அநுபவிக்கும் படியாய் இருக்கிறது

அவளுக்குப் பிரியமாகத்
தன் திரு உள்ளத்தாலே சங்கல்ப்பித்தவை இவை

உபாய உபேயத்வே ததி ஹிதவ தத்தவம் ந து குனௌ-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-88-என்கிறபடியே
உபாய உபேயங்களாகை அவனுக்கு ஸ்வரூபம்

குணாய அன்று
சத்தைக்கு நாம் கூட்டுப் படுமன்று
உபாயத்வத்துக்கு சஹாயாந்தரங்கள் வேண்டுவது
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திருமாலை–திருவாய்மொழி -2-7-8-

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: