அவதாரிகை –
இருந்தபடி இது வாகையால்
ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே
ஆனபின்பு
ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள் –
என்கிறார் –
———————————————————————————
சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று —–70-
————————————————————————————
வியாக்யானம் –
விழும் உடம்பு செல்லும் தனையும்
நல்லிதழ்த் தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் திரு மாலைத் தொழுமின்
மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –
சொல்லும் தனையும் –
வாக் இந்த்ரியமானது விதயேமாம் அளவும் –
தொழுமின் –
விழுமுடம்பு செல்லும் தனையும் –
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும்
நல்லிதழ்த் தாமத்தால்-
நல்ல செவ்விப் பூவை உடைத்தான மாலையாலே
வேள்வியால் –
செவ்விப் பூ கிடையாதாகில்
கர்த்தவ்யமான
யாகாதி கர்மங்களாலே
தந்திரத்தால் –
மந்திர தந்த்ரம் அடையச் செய்யப் போகாதாகில்
தந்திர ரூபமான க்ரியாதிகளாலே-
க்ரியா ரூபமான தந்த்ரம் செய்யப் போகாதாகில்
மந்திரத்தால் –
மந்தரத்தால்
நாமத்தால் –
மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்
அதிகார நியதியும் வேணும் என்று
இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது –
ஆரை என்னில் –
திருமாலை –
வகுத்த விஷயத்தை –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ
இம்மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு
அவள் கூடி இருந்தாள்-
ஏத்துதிரேல் நன்று
——————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply