பாசுரம்–67-
அவதாரிகை
மோக்ஷ இச்சை யுடையவர்களும்
அறிவு தலை நின்றவர்களும்
அவனுடைய திருவடிகளை ஏத்துவது
திரு நாமங்களை ஓதுவது -என்று சொல்லிற்று கீழே
இந்த நிர்பந்தம் வேண்டுவான்
என் என்னில்
நாம் தான் அறிவு யுடையாரை இறே சொல்லிற்று
அந்த அறிவுக்குக் கந்தவ்ய பூமி
ஸ்ரீ யபதி அல்லது இல்லாமையாலே என்கிறார் –
பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
பதவுரை
ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்
பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு
ஆறாகில் பூர்ணமாய் ஸஞ்சரியா நின்றுள்ள கடலையே நோக்கக் கடவதாய் இருக்கும்
கடலை நிறைக்கப் புகுகிறது அல்லவே
புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமையாலேயே
ஒண் பூ உயரும் கதிரவன் நோக்கும் –
அழகிய பூவானது ஆதித்யன் எத்தனையேனும் தூரஸ்தனாகிலும் –
அவனையே பார்த்து
அவனுக்கு அல்லது அலராது
கிட்டின நெருப்புக்கு அலர ஒண்ணாதே
உயிரும் தருமனையே நோக்கும்
சேதன வர்க்கம் அடங்க ப்ராயேண யம வஸ்யராயே இருக்கக் கடவது
அவனே அவ்விடம் நமக்கு நிலம் அன்று என்று கை வாங்கிப் போம் இடத்தை ஒழிந்த
இடம் எங்கும் இங்கனே இருக்கக் கடவது –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
அப்படியே அறிவாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது
ஸம் ஜ்ஞாயதே யேந ததஸ் தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் ஸந்த்ருச்யதே வா
அப் யதி கம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-87-
எந்த அறிவினால் தோஷம் ஏற்றதும் சுத்தமானதும் மலம் ஏற்றதும் ஒப்புயர்வற்றதுமான
அந்தப் பர வஸ்து அறியப் படுகின்றதோ அதுவே ஞானம்
மற்றவை அனைத்தும் அஞ்ஞானம் எனப்படும்
இவ் வாத்மா வாகிற தாமரைக்கு ஞானமாகிய விகாஸம் பிறக்கைக்கு
பாஸ்கரனும்
பிரபையும் இறே
ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு
வ்யாவ்ருத்தம் தான்
அத்தலையாலே தோற்றும் தான் ஒழிய தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை
திருவடிகளில் ரேகையும் சாயையும் போலே
நிழலும் அடி தாறும் ஆனோம் —
——————-
பாசுரம் –68-
அவதாரிகை –
அறிவுக்கு பர்யவசாந பூமி அவன் அல்லது இல்லை –
இங்கனே இருக்கச் செய்தே அவன் தன்னை அறிவார் தான் இல்லை
என்கிறார் –
—————————
உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் –68-
பதவுரை
விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத் தான்
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப் பாற்கடலைத் தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]
————————————————-
வியாக்யானம் –
உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி –
வர்ஷாயுதைர் -இத்யாதிப் படியே
கால த்ரயத்தையும் ஒரு போகி யாக்கி நின்று அறியப் புக்காலும்
உன்னுடைய குணாதிக்யத்தால் வந்த பெருமை சிலரால் அறியப் போமோ –
உணர்வாரார் உன் உருவம் தன்னை –
உன்னுடைய ஸ்வரூப குணங்களைத் தான் அறியப் போமோ –
உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் -நால் வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்
ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையயையுமாய்
சம்சாரத்திலே வந்து அவதரிக்கும் ஸ்வ பாவனுமாய்
இரண்டு இடத்துக்கும் சாதாரணமாகத்
திருமலையில் நின்று அருளுவானுமாய் –
நல்ல ஸ்வரத்தை யுதைத்தான வேதைக சமதி கம்யமாய் உள்ள நீ
கிடந்த பால் உணர்வார் யார்
நீ கிடந்த இடம் -என்னுதல்
நீ கிடந்த திருப் பாற் கடலை -என்னுதல்
கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கப் போகாது இறே
தஸ்ய யோநிம்
அவனுடைய பிறப்பு
உயர்வற உயர்நலம் உடையவன் பிறப்பு
தீரா
தீமதாம் அக்ரேசரா-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றார்
பரிஜா நந்தி
ஷணம் தோறும் எத்திறம் -என்பர் –
நால் வேதப் பண்ணகம் –
வேதம் காட்டுகிற அர்த்த சக்தி உன்னாலே
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ நீதிரேஷா நயோஹரி போதோ விஷ்ணுரியம் புத்திர் தரமோ சௌ
சத்க்ரியாத்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-
———————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply