முதல் திருவந்தாதி-பாசுரம் -66 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அறிவுடையராய் இருப்பார்கள் ஆகில்
பஜநீயன் அவனே கிடீர்
என்கிறார் –

———————————————————————-

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

————————————————————————–

வியாக்யானம் –

காலை எழுந்து உலகம் கற்பனவும்-

பஜன உபக்கிரம சமயத்திலே எழுந்து இருந்து
லோகம் அடங்க அதிகரிக்கும் இடமும்
சத்வ உத்தர காலத்தில் செய்ய அடுப்பது இதுவே இ றே
கிளிரொளி யிளமை -திருவாய்மொழி -2-10-1-
காலை நன்ஞானத் துறை படிந்தாடி -திரு விருத்தம் -93-
ஸ்திதே மனஸி-

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்-
அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே
சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

வேலைக் கண் ஓராழி யானடியே –
கரையை யுடைத்தாய்
இடமுடைத்தான கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை -என்னுதல் –
அன்றிக்கே
வேலை என்று கடல் தனக்கே பேராக்கி
ரஷ ணத்துக்கு  பரிகரமான திரு வாழி யை உடையவன் என்னவுமாம் –

யோதுவது மோர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர் –
ஓதுவதும் ஒர்ப்பனவும்
ஸ்ரவண மனனம் பண்ணுவதும்
ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை
கீழ்ச் சொன்ன இவ்வர்த்தத்துக்கு சாதன ரூபமாகச் செய்யுமவை இ றே –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: