முதல் திருவந்தாதி-பாசுரம் -63 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே
ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும்
கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய
சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின
நானும் பிரவணன் ஆனேன்
என்கிறார்-

—————————————————————————–

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

——————————————————————————-

வியாக்யானம் –

தோளவனை யல்லால் தொழா –
நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும்
என் தோளானது அவனை யல்லது
தொழுகிறது இல்லை
அவன் ரஷகன் ஆகவுமாம் -தவிரவுமாம்  -அவனை யல்லது தொழாது –

என் செவி யிரண்டும் கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –
என்னுடைய செவிகள் இரண்டும்
கேள்வன ஆனவனுடைய இனிய மொழியே கேட்டு இருக்கும்
நிருபாதிக பந்துவானவன் உடைய
இனிய பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –

நா நாளும் –
நா வானது எப்போதும் –
கோணா கணையான் குரை கழலே கூறுவதே  –
கோள் நாகணையான் –
மிடுக்கை யுடையவன் -என்னுதல்
ஒளியை யுடையவன் -என்னுதல்
பிராட்டியும் அவனுமான போதைக்கு
தாரண சாமர்த்தியத்தை யுடையவன் -என்னுதல் –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞானபலை கதாமதி -ஸ்தோத்ர ரத்னம் -39-
அவனோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகரை உடையவன் -என்னுதல்
அப்படிப்பட்ட திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரன் உடைய திருவடிகளையே கூறுவதும்

நாணாமை நள்ளேன் நயம்  –
நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்
ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –
விஷய ப்ராவண்யம் தான் இருப்பது
குருட்டு நிலாவிலே ஆண் பிள்ளைச் செற்றாழ்வியை -அலியை -ஸ்திரீ என்று தொடர்ந்து திரிந்த மாத்ரமாய் இருக்கும் இறே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: