முதல் திருவந்தாதி-பாசுரம் -62 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவற்றை உண்டாக்கி
மேல் உள்ள கார்யங்கள் தாங்களே செய்து கொள்ளுகிறார்கள் என்று இருக்கை  அன்றிக்கே
இவற்றுக்கு விரோதி யுண்டாமன்று
களை பிடுங்குவானும் அவனே
என்கிறார் –

—————————————————————————

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

———————————————————————————-

வியாக்யானம் –

புணர் மருதி நூடு போய்ப்-
ஓன்று என்னலாம் படி நிர்விவரமான மருதின் நடுவே
இடம் கண்டு போய் –

பூங்குருந்தம் சாய்த்து –
அடியே பிடித்துத் தலை யளவும் செல்லப் பூத்து
தர்ச நீயமாய் நின்ற குருந்தத்தைச் சாய்த்து –
பூவைக் காட்டி அந்ய  பரதை பண்ணி வஞ்சிக்க  நினைக்கை –

மண மருவ மால் விடை யேழ்   செற்று
நப்பின்னை பிராட்டி யோட்டைப்
பணிக் ரஹண மங்களமானது தலைக் கட்டுகைக்காக
கொடியவான வ்ருஷபங்கள் ஏழையும் முடித்து

கணம் வெருவ ஏழுலகத் தாயினவு ம் –
சந்கைஸ் ஸூ ராணாம்-என்கிறபடியே
அநு கூலரான தேவஜாதி விளைவது அறியாதே அஞ்சும்படிக்கு ஈடாக ஏழு லோகங்களையும் வளர்ந்து அநாயாசேன அளந்து கொண்டனவும் –
கீழ்  தானாகக் வந்த ஆபத்து போக்கின படியும்
நப்பின்னை பிராட்டிக்குவந்த ஆபத்து போக்கின படியும் சொல்லிற்று
இங்குப் பிராட்டிக்குச் செய்யும் செயலை இந்த்ரனுக்குச் செய்த படி சொல்லுகிறது-
மெண்டிசையும் போயினவும் -எட்டு  திக்குகளிலும் போய் வ்யாபித்தனவும் –
சூழரவப் பொன்கணையான் தோள் –
உரப்பை யுடைத்தாய்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளால் குறைவற்று உயர்ந்து இருந்துள்ள
திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்
அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்
படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே
பாண்டு ரஸ்ய ஆதபத்ரச்ய சாயாயாம் ஜரிதம் மயா-அயோத்யா -2-15-
சிம்ஹாசனத்தில் இருக்க அவசரமே பெற்றிலன் -என்கிறார்
இக்காலத்தில் இ றே நிழலிலே முத்துக் குடை இடுவது –

———————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: