முதல் திருவந்தாதி-பாசுரம் -60 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒருவன் பல போக்தாவாய் இருக்க
ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் –
அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி
அறியாதவனால் செய்யலாவது உண்டோ
என்கிறார் –
சேதனர் கீழே போய்த்தும்
தாங்கள் படுகிறதும்
மேல் வரக் கடவதும்
அறியார்கள்
சர்வேஸ்வரன்
பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று
இவர்கள் கீழ்ப் பட்டதும்
இப்போது படுகிறதும்
மேல் படக் கடவதும்
எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே
அவனே உபாயமாம் இத்தனை இ றே –

—————————————————————————————-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

——————————————————————————————–

வியாக்யானம் –

சரணா மறை பயந்த தாமரை யானோடு –
அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்த தாலே
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ  நம-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக
அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –

மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் –
தாங்கள் நித்தியராய் இருக்கச் செய்தே
மரண தர்மாக்களாய்-செத்தான் பிறந்தான் -என்கிற வ்யவஹாரத்துக்கு

யோக்யதையை உடையராய் இருந்துள்ள  சேதனர்க்கு எல்லாம் கல்பாதியிலே உண்டாய்
கல்பாந்ததிலே இல்லை யாகிற ப்ர்ஹ்மாவோடு
ஜாயதே ம்ரியதே -என்று
தோற்றி மாய்கிறவர்களோடு வாசி இல்லை
அடைய அஞ்ஞரும் அசக்தரும்  –
அரணாய –
அரணானவை
ரஷையானவை –

பேராழி கொண்ட பிரான் அன்றி –
ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான
உபகாரகனை யல்லது –

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த வுலகு –
கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று
அறிவுடையாரை இட்டு இ றே லோகத்தைச் சொல்லுவது
அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது
ஆனபின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது

இத்தால்
அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி
சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை
மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்
மூடோயம் நாபி ஜா நாதி –
ஆப்பான் ஜீயரைக் கேட்க
பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
பட்டர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
அன்றிக்கே
கீழ்ச் சொன்ன தசரதாத் மஜனையே சொல்ல வேண்டில்
பேராழி கொண்ட -என்ற இடத்தை
கடலை வெதுப்பி வசம் ஆக்கினவன் என்று ஆக்கிக் கொள்வது-

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: