முதல் திருவந்தாதி-பாசுரம் -59 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்
விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில்
தசரதாத் மஜனை சரணம் புகு
என்கிறார் –

—————————————————————–

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

————————————————————————-

வியாக்யானம் –

அடைந்த வருவினையோ –
ஜ்ஞான ஆனந்த லஷணமாய்
நித்தியமாய்
ஏக ரூபமாய்
இருக்கிற ஆத்மாவை அசித் சம்சர்க்கம் அடியாக வந்து பற்றி
விடாதே
ப்ரவாஹ ரூபத்தாலே
நித்தியமாய் வருகிற பாபங்கள் –
ஆத்மா ஹேய சம்சர்க்க அனர்ஹனாகையாலே அடைந்தது என்றது
பரமாத்மாவுக்கும் பிரவேசம் ஒக்கும் இ றே
அவன் அநசனாய் இருக்கும் –

அல்லல் நோய் பாவம் –
அது அடியாக வருகிற
ஆதி மானஸ துக்கங்கள் -அல்லல்
சாரீரகமான வியாதி -நோய்
பரிக்ரஹித்த சரீரத்தைக் கொண்டு பண்ணுகிற நிஷித்தாசரணம் -பாவம் –

மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில்-
இவையாய்க் கொண்டு ஆத்மாவைத் தோற்றாத படி நேர்க்கிக் கிடக்கிறவை
வாசனையோடு விட்டுப் போக வேண்டில் –
சரீராரம்ப  ஹேதுக்களான பாபங்களும் பரிக்ரஹித்த சரீரத்தால் பிறந்த பாபங்களும்
சமிதை இடா  மாணியைப் போலேயும்
பரணிக் கூடு வரிந்தால் போலேயும் மிடைந்து அடைந்த -என்று கீழே கூட்டுவது
வந்தேறியாகில் இ றே மீள பிராப்தி யுள்ளது –
மீண்டு ஒழிய வேண்டில்
தொடருகிற பாம்பைத் திரிய விடுவித்தால் போலே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-இ றே
ஒரு ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில் –

நுடங்கிடையை –
சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ
பெருமாளுக்கு ஷண  காலமும் பிரியத் தகாத படி யானவளை
ஏக த்ரவ்யத்தைப் பின்னம் ஆக்கினாப் போலே

முன்னிலங்கை வைத்தான் –
பண்டு இலங்கையிலே இருப்பாக்கினான்
அனந்யார்ஹம் ஆனவளை இ றே பிரித்து இரண்டு இடத்திலே யாக்கிற்று –

முரண் அழிய –
தாயையும் தமப்பனையும் பிரித்தவன் உடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக –

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண் –
பண்டு ஒரு நாள் தன் வில்லை அழகிய கையிலே வைத்தவன் உபாயம்
அன்றிக்கே
அவனை உபாயமாகப் பெற்றேன் -என்றதாகவுமாம் –
அவன் முன்பே யத்னம் பண்ணா நின்றான்
பிரதிபத்தியே யுள்ளது
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -30-30-என்று
அம்பின் கூர்மையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
இத்தால் தன்னைப் பற்றி இருப்பார்க்கு பிராட்டியோடு ஒக்கப்பரிந்து கார்யம் செய்யும் என்னும் இடத்தையும்
அப்பிராட்டி அம்பு எய்யும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம்   உள்ளது என்னும் இடத்தையும்
நம் அபேஷிதங்கள் செய்விக்கைக்கு அவள் புருஷகாரம் என்கையும்
அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணன் பட்டது படுவார் என்னும் இடத்தையும்
சொல்லுகிறது

இப்பாட்டுக்கு வாக்யார்த்தம் –
கீழே இந்திரிய ஜெயம்  பண்ணு என்றது
தொழு என்றது
திரு நாமம் சொல் என்றது
நினை என்றது
என்றதாகப் பல படிகளை சொல்லிற்று –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட்க த்ரயத்தில் வார்த்தை போலே ஸ்வரூபம் விசதமாகைக்குச் சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே
உணர்ந்த வன்று அவனல்லது இல்லை –

———————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: