முதல் திருவந்தாதி-பாசுரம் -57 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ப்ரஹ்மா அறிய மாட்டான் ஆகில் நீர் பின்னை அறிந்த படி எங்கனே என்னில்
திரு நாம த்வாரா அவனை ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்
என்கிறார் –
சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பது அவனைப் பற்றி என்னும் இடமும் –
அறிந்தேன்
என்கிறார்  –

———————————————————————————–

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

———————————————————————————–

வியாக்யானம் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் –
புக்கிடம் புக்கு வடிம்பிட்டு நலியக் கடவதான
பாபத்துக்கு பயப்பட்டேன்
அன்றிக்கே
ஜ்ஞானம் பிறந்த பின்பு இவரை விட்டுக் கடக்க நின்றது ஆய்த்து பாபம்
இது இன்னம் வந்து மேலிடில் செய்வது என் என்று அஞ்சினேன் -என்கிறார் ஆகவுமாம் –
பாபத்துக்கு அடியான தேகம் கிடக்கையாலே பின்னையும் வந்து மேலிடில் செய்வது என் என்று
அஞ்சக் குறை இல்லை என்று அஞ்சினேன் என்கிறார் ஆகவுமாம் –

அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்-
அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்குப்
பின்பு பய ஸ்தானம் இல்லாதபடி
உன் திருவடிகளிலே கிட்டுகைக்காக
வல்லேனாய்ப் பேசினேன் அல்லேன்
ஆற்றாமையாலே உளன் ஆகைக்காகப் பேசினேன் –

நய நின்ற நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன் தொழுது –
நீர்மை யுடைத்தான -என்னுதல்
அன்றிக்கே
நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர்வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு
அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-

சொன்மாலை கற்றேன் தொழுது –
சொல் தொடை கற்றேன்
அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்   –

——————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: