முதல் திருவந்தாதி-பாசுரம் -51 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம்
இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித் தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே
நம் விரோதியையையும் போக்கி நமக்குத் தன்னைக் கொடு வந்து தரும் கிடாய்
என்கிறார் –

——————————————————————-

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

—————————————————————————

வியாக்யானம் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு –
எளிதில்லாத இரண்டடியும் காண்கைக்காக- என்னுதல்
அன்றிக்கே
எளிதாகக் காணலான வருத்தம் அறக் காணலான
இரண்டு திருவடிகளையும் -என்னுதல் –

என்னுள்ளம் தெளியத்-
உள்ளமே நெஞ்சமே நீ அழகிதாகத் தெளிய அவனும் தெளியும்
நீ அவனைக் காணாமைக்கு அநாதி காலம் பண்ணிப் போந்த ப்ராதிகூல்யம் பரம்பரைகளில்
அவன் பிரசன்னனாய் இருக்கும்
உனக்கு இங்கனே ஓர் அறிவு பிறந்தவாறே அவன் நம் குற்றங்களைக் காண –

தெளிந்து ஒழியும் செவ்வே –

செவ்வே தெளிந்து ஒழியும் -அகவாயிலும் ஒன்றுகிடக்க மனிச்சுக்கு ஒன்றைக் செய்தானாகை அன்றிக்கே
திரு உள்ளத்தோடு பிரசன்னனாய் இருக்கும் –

இனி -பண்டு தெளிந்து தன பேரைச் சொன்னான் ஒருவனுக்கு அவன் வந்து உதவின படியைச் சொல்லுகிறது
கனியில்பொருந்தாவனைப் பொரலுற்று –
செருக்கோடு கிட்டோம் என்று இருந்த ஹிரண்யனைப் பொருது முடிக்கையிலே ஒருப்பட்டு –
ஈச்வரோஹம் -என்று இருப்பார்க்குப் பொருத்தம் இல்லையே
பின்னை அவனுக்கு ஹித ரூபமாக பிரகிருதியை அழிக்கும்-

அரியா யிருந்தான்    திருநாமம் எண்-
ஆஸ்ரிதன் விரோதி யைப் போக்குவதற்காகக் கொண்ட வடிவு என்று
அத்தை யுகந்து
அது தன்னோடு இருந்தான் ஆய்த்து-
அன்றிக்கே
சீற்றத்துக்கு இறை போராமையாலே சோம்பி இருந்தான் ஆகவுமாம்
அவனுடைய திரு நாமத்தை அனுசந்தி
நமக்கு வேண்டுவது அச் சிறுக்கனோபாதி திரு நாமத்தை எண்ணுகை –
பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் நம்மை விட்டுக் கொடான்
எண்ண வொட்டாதவன் பாடு   அறிதியிறே-

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: