முதல் திருவந்தாதி-பாசுரம் -50 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே
சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது
என்கிறார் –

—————————————————————————-

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

——————————————————————————-

வியாக்யானம் –

அரிய புலன் ஐந்தடக்கி –
விஷயங்களில் போகாதபடி அடக்க அரிதான
ஸ்ரோத்ராதி  இந்த்ரியங்களை
வருந்தி நியமிப்பது
ஒரு செய்யில் பாயும் நீர் இரண்டு செய்யில் பாய்ந்தால் இரண்டுக்கும் போராது
ஒழியும் இத்தனை இ றே
சர்வேஸ்வரனை பஜிக்கக் கடவதான இந்த்ரியங்கள்
விஷயங்களில் போகாத படி அடக்கி –
அரிய -என்றது -தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -கீதை -6-34-என்று
மனசை நியமிக்க வரிது என்று அர்ஜுனன் சொன்ன படியே இருக்கை-

ஆய்மலர் கொண்டு –
புஷ்பாத் யுபகரணங்களை அங்குத்தைக்கு ஈடாக கொண்டு
ச்நேஹத்தைப் பண்ணும் பிரகாரத்திலே பண்ணி
ஆஸ்ரயிக்கில்

ஆய்மலர் -செவ்விப் பூக்களைக் கொண்டு –

ஆர்வம் புரிய பரிசினால் –
ச்நேஹம் மிக்க பிரகாரத்தாலே

புல்கில் –
அணையில் –
ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே
நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி
இவ்விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்
சடங்கு வேண்டா –

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்-
தன்னை ஈஸ்வரனுக்கு மேலாக அபிமானித்து
அர்த்திகளுக்கு எல்லாம் மாறாதே கொடுக்கக் கடவேன் என்று
அதுக்கு ஈடாக இருந்த மகா பலி பக்கலிலே –

வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –
கொடுத்து வளர்ந்த கையிலே தானே சென்று நீர் ஏற்றவனை
காண்கை எளிது
எதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது
என்கிறார் –

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: