முதல் திருவந்தாதி-பாசுரம் -48 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே -நமக்கு இத் தேவைகள் எல்லாம் வேண்டா கிடாய்
அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான்
ஆனபின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய்
என்கிறார் –

—————————————————————————-

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து ——48–

——————————————————————————-

வியாக்யானம் –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றி  –
ஒரு திருவடிகளை மேலே எடுத்து
ஒரு கையாலே சத்ருக்களைச் சுழற்றினான் ஆயத்து –
அன்றிக்கே
ஒரு திருக் கையாலே நமுசியினுடைய காலைச் சென்று பற்றிச் சுழற்றி எறிந்தபடி யாகவுமாம் –
யோர் கை மேல்  சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் –
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
ஒரு திருக் கையிலே மறுகிக் கொடு வருகிற
தேவர்களோடு அசுரர்களோடு வாசியற
வெருவும்படிக்கு ஈடாக பிரதி பஷத்தின் மேலே நெருப்பைத் தூவும் ஸ்வ பாவத்தை யுடைத்தாய்
யுத்தத்துக்கு பரிகரமான திரு வாழியை தரித்தான் ஆய்த்து-
அநுகூல பிரதிகூல விபாகம் அற அஞ்சும் படி இ றே
அப்போதைய வியாபாரம் தான் இருந்தபடி
அவன் சிவந்த திருவடிகளிலே கிட்டும்படி வாசனை பண்ணு
சேவடி தானே  இருந்த இடத்திலே வந்தால்
இறாயாமையே வேண்டுவது  –

மருவாழி நெஞ்சே மகிழ்ந்து –
அளவுடைய நெஞ்சே
அது செய்யும் இடத்தில் தேவைக்கு ஒரு கால் செய்ததாக ஒண்ணாது
ப்ரீதி பூர்வகமாய்க் கிட்டும்படி வாசனை பண்ணு –
விரோதிகளைப் போக்குவானும்
திருவடிகளைத் தருவானும்
ப்ரீதன் ஆவானும்
அவன் ஆனால்
அனுபவித்துமகிழ மாட்டாயோ –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: