முதல் திருவந்தாதி-பாசுரம் -47 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து
சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு
ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது
என்கிறார் –

—————————————————————————

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

——————————————————————————-

வியாக்யானம் –

வாரி சுருக்கி-
ஆனைக்கு பலம் குறைக்கைக்காக தண்ணீரைக் குறைப்பார் ஆய்த்து –
அதுக்குத் தண்ணீர் உடைய ஸ்தானே
இவற்றுக்கு விஷயங்கள் அத்தனை இ றே
போகாதிகளைக் கொடு போய் க்ரமத்தாலே  குறைப்பது –
கடுக மாற்றில் அது தானே குதறு காட்டுகைக்கு உடலாய்  இருக்குமதாய்த்து –
அன்றியிலே
முடியவதிலே விட்டு வைத்தான் ஆகில் செருக்காலே அவை தாம் தமக்கு உரியன அல்லாத படி கொண்டு கிளரும்
அது புத்தி நாஸாத் ப்ரணச்யதி -யாய் விடும்
ஆனபின்பு இரண்டுக்கும் நடுவாக சத்தா மாதரத்துக்கு வேண்டுவது செய்து கொண்டு போருகை –

மதக் களிறு ஐந்தினையும்-
மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –

சேரி திரியாமல் செந்நிறீஇ –
பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில்
விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இ றே-யானை
அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால்
பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து –

கூரியமெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே-
அதாவது ஸூ ஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய்
தர்மிக்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –
அது தான் விஹித கர்மங்களை பாலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து
ஷீண பாபனாய்    –
ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய்
ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து
உபாசனம்  த்ருவாச்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி
விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று
சொல்லுகிறபடியே
அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள்  –

மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்-
இவர்கள் காண்பார்கள் என்னும் இடத்துக்கு திருஷ்டாந்தம் மேல்
பண்டு ஒரு நாள் ஓர் யானையானது புறம்புத்தை அந்ய பரதைகள் அடைய அற்று
அவன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணுவோம் என்று ஸ்ரத்தை பண்ணி
ஒரு பொய்கையிலே புக்கு இடர்ப்பட்ட அதற்காகத் தன் திருவடிகளிலே அடிமை கொண்டவனுடைய
திருவடிகளைக் காணப் பெறுவார்கள் –

இத்தால் –
விரோதியான முதலையைப் போக்கி
தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே இவர்கள் உடைய பிரதிபந்தகங்களைப் போக்கித் தன்னைக் காட்டிக் கொடுக்கும் -என்கிறது  –

சேரி திரியாமல் செந்நிறீ –
விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரச்ய தேஹின
ரசவர்ஜம் ரசோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -கீதை -2-59-
கூரிய மெய்ஞ்ஞானம் –
ஸூ பாஸ்ரயமாயும்
உபாய உபேயமாயும் அனுசந்திக்கை –

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: