முதல் திருவந்தாதி-பாசுரம் -46 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர்களுக்குத் தான் முற்கோலி நின்று ஹித பரனாகை அன்றிக்கே
இவர்கள் தாங்கள் உகந்தபடி கடக்கப் போய் அனர்த்தங்களைச் சூழ்த்துக் கொண்டு நிற்கும் அன்றும்
பாபத்தைப் போக்கி ரஷிப்பான் அவன் கிடீர் –
என்கிறார் –
கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று –
இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது  –

———————————————————————————

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் ——–46-

———————————————————————————–

வியாக்யானம் –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற –
அழகிய ஸ்வரத்தை யுடைத்தான
வேதத்தைத் தரித்துள்ள
ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-
லோக குருவுமாய்
தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இ றே சேதித்தது   –
வாமாங்கு ஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோமயா -என்கிறபடியே –
அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்க ப்ரஹ்ம ஹத்யையாலே
அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –

வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –
வெண் புரிநூல் மார்வன் –
விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி –
மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே
இவனும் தேவியும் சண்டேச்வரனும் அப்படியே
வினை தீர -என்கிற இத்தால்
இவனுடைய கர்ம வச்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈச்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

இவனுடைய பாபம் போம்படிக்கு ஈடாக
புண் புரிந்த ஆகத்தான் –
ஐயோ அருமருந்தானான் ஒருவன் இங்கனே படுவதே என்று திரு உள்ளம் புண் பட்டது ஆய்த்து
அன்றிக்கே
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் -திருச் சந்த விருத்தம் 113-
ச்வேதத்தை வாங்கிக் கொடுத்த படி யாகவுமாம்-
அவன் தலை அறுப்புண்டு ஆற்றாமைப் பட்டு நின்றான்
இவன் தலை அறுத்துப் பாதகியாய் திரிந்தான்
அவர்கள் இவருடைய வ்யசனத்தையும் போக்கினான் ஆய்த்து சர்வேஸ்வரன் –

ஆக
இப்படி இருந்துள்ள சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை
ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் கிடீர்
தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் போகத்தால் பூமி யாள்வார்
ருத்ராதிகள் படும் எளிவரவு படாதே
நித்ய சூரிகள் உடைய அனுபவத்தோடு கூட
சம்சாரத்தில் போகமும் புஜிக்கப் பெறுவார்
விண்ணுளாரிலும் சீரியர் -திருவாய்மொழி -4-3-11-என்கிறபடியே
அன்றிக்கே
பூமியும் ஆண்டு
பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் -என்றுமாம் –

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: