முதல் திருவந்தாதி-பாசுரம் -44 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே
அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும்
என்கிறார் –

———————————————————————-

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–

————————————————————————-

வியாக்யானம் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே –
ஆஸ்ரிதர் ஆனவர்கள் எதேனுமாக ஒரு திரு மேனியை விரும்பி
இருந்தால் அவனும் அத்தை தனக்கு அசாதாரணமான திரு மேனியாகக் கொண்டு
விரும்பக் கடவனாய் இருக்கும் –
இவர்கள் யாதொரு த்ரவ்யத்திலே வாசனை யுடையராய்
அதிலே ருசி பண்ணிக் கிடந்தார்கள்
அவனும் அத்தையே தனக்குத் திரு மேனியாக ஆதரியா நிற்கும்
ஆஸ்ரித அர்த்தமாக இ றே விக்ரஹன்களைக் கொடு வந்து காட்டுவது
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்த -120-11-
எ யதா மாம் ப்ரபத்யந்தே தாமஸ் ததைவ பஜாம்யயம் -கீதை -4-11-
நமக்கு நல்லார்கள் இன்னார் என்று இல்லை
இன்னபடிபஜிப்பார் என்றும் இல்லை –
அவர்கள் நின்ற நிலையிலே -அவர்கள் பஜித்த படியிலே-அவர்களைப் பற்றுவேன் -என்கிறது –
ஸூ வர்ண ரஜதாதிபி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-16-
அதொரு காலத்திலே உள்ளார் பெற்றுப் போய் பிற்பாடர் இழைக்கை  யாலே
அவர்கள் இழவே திரு உள்ளத்திலே பட்டு   -அவர்களுக்கு கண்ணுக்கு இலக்காகாக் கொள்ளுமதிலே யாய்த்து திரு உள்ளம் பொருந்தி இருப்பது –
எம்பெருமானார் பிஷைக்கு எழுந்து அருளா நிற்க
சில சிறு பிள்ளைகள் கையாலே ஒரு விக்ரஹமாக கீறி உம்முடைய எம்பெருமான் திரு மேனி என்று காட்ட
பாத்ரத்தை வைத்து தண்டன் இட்டு அருளினார் –

தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் –
ரூபத்துக்கு மேலே மற்றும் திரு நாமங்களும் அவர்கள் உகந்ததாய் இருக்கும்
தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்
கஞ்சனூரிலே வண் துவரைப் பெருமாள் என்று ஒருத்தன் தன நாயனாரை சதங்கை யழகியார்  -என்று திரு நாமம் சாத்தினான் –
அந் நாயனார் ஸ்வபனத்திலே சதங்கையும் தானுமாய் அவன் முன்னே நின்றாடினார்
நாயனை -நீர் ஆர் -என்று கேட்க -நான் சதங்கை யழகியார் -என்றாராம்
எங்கள் ஆழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற் பழம் வேண்ட -நீ யார் -என்ன
நான் ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை குடி இருக்க  வொட்டுகிறிலன் -என்றார் –
தமருகந்துஎவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே அவ்வண்ணம்-
ஆஸ்ரிதர் ஆனவர்கள் உகந்து கொண்டு யாதொரு பிரகாரம் அனுசந்தித்து அனந்தரத்திலே
அநவரத பாவனை பண்ணி  இருப்பார்கள் -சர்வேஸ்வரன் அந்த பிரகாரத்தை உடையனாம் –
ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன்
ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்
இவர்கள் சத்தாதிகளும் நாமரூபங்களும் தன அதீனமானாப் போலே தனக்கு சர்வமும் ஆஸ்ரித ஆதீனம்
சென்றால் குடையாம் -என்று இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும்
அவனது பிரணயித்வம்-
இவனது ஸ்வரூபம் –

ஆழியானாம்-
அப்ராக்ருதமான சகல பரிகாரங்களுக்கும் உப லஷணம்
அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும்
அவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்மொழி -3-7-6-

இத்தால் நாம ரூபாதிகள் அன்றிக்கே
குண சேஷ்டிதாதிகளும் அவன் இட்ட வழக்காய் இருக்கும்
என்கிறது –

———————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: