முதல் திருவந்தாதி-பாசுரம் -42 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிக் குற்றம் பொறுக்க வேண்டுகிற ஹேது என் என்னில்
அங்கே பிராட்டிமார் நித்ய வாசம் பண்ணுகையாலே -என்கிறார்
குற்றத்தைப் பொறுப்பித்து குணத்தை குவாலாக்குவார்கள் –
அவள் -பாபா நாம் வா ஸூ பா நாம் வா -யுத்த -116-44-என்றால்
இவன் -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத்  -யுத்த -18-3-என்னத் தட்டு உண்டோ –

————————————————————————

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் ——–42-

——————————————————————————-

வியாக்யானம் –

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த  மாலோத வண்ணர் மனம் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் –
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-
மண் மகட்கே தீர்ந்தவாறு என் கொல்
ஆய்மகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று
மூவர் பக்கலிலும்  ஏறிட்டு அனந்தாழ்வான் நிர்வஹிக்கும் படி
நாய்ச்சிமார் மூவரும் சேர இருந்தால் இவர்கள் மூவருக்கும் ஒக்க ச்நேஹிதனாய் இருக்கிற இந்த ஆச்சர்யம் இருந்த படி என் என்று –
இதுக்கு பட்டர் அருளிச் செய்யும் படி
கடலானது திருவடிகளில் வந்து ஸ்பர்சித்து
ஸ்ரமஹரமான திவலை தொடை குத்தத்
தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமாகா நின்ற பணங்களை யுடைய
திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற
நீர்க் கிளர்த்தி யுடைத்தான ஓதம் போலே இருக்கிற வடிவழகை உடைய சர்வேஸ்வரன் உடைய திருமகள் மேல் மனமானது
இவர்கள் மூவரும் சேர்ந்தாலும்  பெரிய பிராட்டியாருக்கே -என்றதாய் இருக்கும்
அதாகிறது -அவளோட்டை புணரும் போது
புஷ்பாங்க ராகைஸ் சமம்  -என்று
ஒரு நிலா சந்தனம் பூ தென்றல் இவை போலே உபகரண கோடியாய்ப் புக்கு அன்வயிப்பார்கள் அவர்கள் –
இவர்களோடு கலக்கும் போது அவளுக்குத் தன திரு முலைத் தடங்களிலே நெருக்கி அணைத்தாப் போலே இருக்கும்
ஓர் அவயவியையே அனுபவித்தானாய் இருக்கை
இதர விஷயம் இருவருக்கும் போராமையாலே சீறு பாறு
என்கைக்கு உடலாம்
இங்கு போக்யாதி சயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அனுபவிக்க வேணும் -என்கை-

——————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: