முதல் திருவந்தாதி-பாசுரம் -41 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட பந்தம் உண்டே யாகிலும்
அவன் விரோதி நிரசன சீலனாகிலும்
குற்றவாளரான நமக்கு அவன் பாடு செல்ல ஒண்ணுமோ -என்ன
அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் –
நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை –
இனி  நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார்
என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  ——–41-

—————————————————————————————-

வியாக்யானம் –

குன்றனைய குற்றம் செய்யினும் –
மேரு மந்தர மாத்ரே அபி -என்கிறபடியே
ஒரு மலை யத்தனை பாபம் பண்ணுவது –
பெருமைக்கும் போக்க ஒண்ணாமைக்கும்மலையை ஒப்பாகச் சொல்லுகிறது
அநுபவ விநாச்யமாய் யல்லது தீராமை
அவன் பொறுத்தோம் என்னப் போம் இத்தனை –

குணம் கொள்ளும் –
அவன் ஸூ க்ருதமடியாக ஏதேனும் ஒரு நன்மை கலசி வந்தது உண்டாகில்
அத்தை அந்த மலை யோடு ஒக்க நினைத்து இருக்கும் -என்னுதல்
அன்றிக்கே
குற்றங்கள் எல்லாத்தையும் மறந்து
இருந்த குணம் ஒன்றையும் சுவீகரிக்கும் -என்னுதல்
அதாவது
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்
அவனுள்ள வன்றே இவ்வாத்மாவும் உள்ளது ஓன்று –

இத்தனைநாளும் இத்தைப் பெறாது ஒழிவான் -என் -என்னில்
இன்று  முதலாக வென்னெஞ்சே –
சர்வேஸ்வரனுக்கு இப்படி இருப்பதொரு ஸ்வபாவம்  உண்டு என்னும்
இவ்வாராய்ச்சி யுனக்குப் பிறந்த இன்று தொடங்கி-
என்னை யுன் வழியாக்குகை தவிர்ந்து நீ என் வழியே நிற்கப் பெறுவதே –

சஹ்ருதயமாக அவனுடைய குணங்களைப் பேசப் போமோ என்னில் –
என்றும் புறனுரையே யாயினும் –
அஹ்ருதயமான சொல்லாலே யாகிலும்
பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தமாக துதித்தாகிலுமாம் –
வ்ருதைவபவ தோயாதா பூய ஸீ ஜன்ம சந்ததி
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சித்ய சரணம் வ்ரஜ –

பொன்னாழிக் கையான் –
கண்டாயே
இவ்விஷயம் இருந்தபடியால் மறக்கலாய் இருந்ததோ
நீ ஏதேனும் ஒரு படி இழிந்தாலும் சஹ்ருதயமாகப் பண்ணுவித்துக் கொள்ள வற்றாய் காண்
அவ்விஷயம் இருப்பது –

திறனுரையே சிந்தித் திரு  –
அவனிடை யாட்டம் ஆனவற்றையே அநு சந்தித்து நிர்ப்பயமாய்க் கொண்டு இரு
அங்கன் அன்றிக்கே
புறனுரையே யாயினும் என்று நான் சொன்ன வித்தை
புறம்பே சென்று இருந்தாயே யாகிலும்
உனக்கு அழகிதாகச் செய்யப் பார் -என்கிறார் ஆகவுமாம்
அவனுடைய திறமான புறனுரை யுண்டு
அவன் மா ஸூ ச என்று சொன்ன சொல்லு
அத்தை அநு சந்தித்து ஸ்தி தோஸ்மி -என்கிறபடியே
ஸூ கமே இருக்கப் பாராய் -என்கிறார்

திறனுரை
மித்ர பாவேன
மாதவன் என்றதே கொண்டு –தீது அவம் கெடுக்கும் அமுதம் -திருவாய்மொழி -2-7-3-

——————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: