முதல் திருவந்தாதி-பாசுரம் -40 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இங்குற்றை நித்ய வாசம் தனக்கு
அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி
யுகக்குமத்தை கிடீர் –
என்கிறார் –

——————————————————————————-

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று —–40—

———————————————————————————-

வியாக்யானம் –

பெருவில்
அவஷ்டப்ய மஹத் தநு-யுத்த -100-12 -என்கிறபடியே

பகழிக் –
கூரம்பன் கூர்மையை விஸ்வசித்து இருப்பார் வார்த்தை
இலை துணை மற்று என் நெஞ்சே –கூரம்பன் அல்லால் -நான் முகன் திரு -8
ஆழ்வார்கள் ஆச்சார்யர் கள் போல் கூர்மையில் நம்பிக்கை வைத்து அச்சம் இல்லாமல் இருப்பவர்கள் ஆய்த்து

குறவர் கைச் செந்தீ –
ராம லஷ்மணர்களைப் போலே
சக்கரவர்த்தி திருமகன் வில் பிடித்தாப் போலே யாய்த்து
அங்குத்தை திரு வேடுவரும் வில் பிடிக்கும் படி
பெரிய வில்லையும் வாய் அம்புகளையும் கூட
ஒரு கையிலே எடுத்துப் பிடித்து
மற்றைக் கையிலே இருளுக்கு வெளிச் செறுப்பாக சூள் நெருப்பைக் கொண்டு
புனம் காவல் கொள்ளப் போவார்கள் ஆய்த்து –

வெருவிப் புனந்துறந்த  வேழம் –
புனங்களிலே பட்டி மேய்வதாக வந்த அங்குற்றை யானைகள் ஆனவை
இவ் விளக்கு ஒளியையும்
இவர்கள் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியையும் கண்டு அஞ்சி
இனி இங்கு ஒரு நாளும் நாம் வரக் கடவோம் அல்லோம் என்று
புனத்தை சந்யசித்துப் போமாய்த்து –

இரு விசும்பில் மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே –
இது போன இடம் தனிலேயும்
பரப்பை உடைத்தான ஆகாசத்தின் நின்றும் நஷத்ரங்கள் விழுகிறவத்தைக் கண்டு
பூமியில் நெருப்பை விழ விட்டார்கள் என்று
அவ்வருகு போக்கில்லாமையாலே நின்ற   இடத்தே நின்று குலையா நிற்கும்
இன்னம்  இப்புனம் தன்னிலே வந்தால் வேண்டும்படி யாய்த்து இருப்பது
இதுவாகில்   அன்யார்த்தம் என்றாகிலும் கொள்ளலாம்
நம்மையே குறித்து வந்து விழுகிறது என்று தோற்றி இருக்குமாய்த்து –

மேல் -பண்டு

அசுரர் கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று –
இப் பிரசங்கத்தாலே
நர சிம்ஹத்தைக் கண்டு ஹிரண்யன்  அஞ்சின படியை நினைக்கிறார்
அசுரர் கோன் உண்டு -ஹிரண்யன்
அவன் விழுந்து முடிந்து போகக் கண்டு சிறுக்கன் உடைய
விரோதியைப் போக்கப் பெற்றோம் என்று உகந்தவனதான திரு மலை
இன்னம் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வருமாகில் தீர்க்க வேணும் என்று அவன் வந்து நிற்கிற திருமலை –
இரு விசும்பில் மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே –

——————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: