முதல் திருவந்தாதி-பாசுரம் -39 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவனது அல்லாத தேசம் உண்டோ –
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணாத வியாபாரம் உண்டோ
ஆனபின்பு இங்குத்தைக்கு இத்தனை விசேஷம் என்னென்ன
அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே
இவ்விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற  தேசம்  –
என்கிறார் –

———————————————————————–

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது ——39–

—————————————————————————

வியாக்யானம் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம் –
பிரளய ஆபத்து பிரச்துதமான பின்பு
பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
இந்த்ரனாலே இடர்ப்பட்ட வன்று மலையை எடுத்துப் பரிஹரித்தது –

கடநதது கஞ்சனை முன்னஞ்ச –
கம்சன் மிகைச் செயல் செய்த அன்று
அவன் தோற்றரவிலே அஞ்சும் படிக்கு ஈடாக அவனை முடித்து விட்டது –

கிடந்ததுவும் நீரோத மா கடலே –
இது எல்லாத்துக்கும் அடியாகத்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று

இங்கன் அன்று பேரோத வண்ணர் பெரிது வேங்கடமே நின்றதுவும் -என்கிறார்
கிளர்ந்து வருகிற ஓதம் போலே இருந்துள்ள வடிவை யுடையவர்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே விரும்பிக் கொண்டு
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இவ்விடம் -என்கிறார்
அவதாரங்கள் -சம்பவாமி யுகே யுகே -கீதை -4-8-என்று
கார்ய காலங்களிலே ஆபத்துக்கு அநு குணமாக வந்து உதவிப் போம் இ றே
ஏற்கவே பரிஹரிப்பதாக நிற்கிற விடம் இ றே இவ்விடம் –
நாம் எம்பெருமானை உகந்தோம் என்று வைத்து சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்றாலும் நாலைந்து பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சதுரங்கம் பொருத்தல் உறங்குதல் செய்வுதோம்
நமக்கு ஒன்றிலும் ச்நேஹம் இல்லை –

இடந்தது இத்யாதி –
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த  படி –
இந்த்ரனால் வந்த நலிவு தீர்த்த படி –
கம்சனால் வந்த நலிவு தீர்த்த படி –
அவதாரத்துக்கு ஏகாந்த மான விடம் –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகும்
கோவர்த்த உத்தரணம் பண்ணின போதை அழகும்
கம்சனை அழித்த வெற்றியால் வந்த   அழகும்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின அழகும்
எல்லாம்
திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: