முதல் திருவந்தாதி-பாசுரம் -37 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ –
என்றும் தன்னை இரப்பாளனாக்கி
நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
என்கிறார் –
நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம்
தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இ றே என்ன வேண்டாதபடி
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்  –

————————————————————————————

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் ———–37—

———————————————————————————-

வியாக்யானம் –

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் –
பஹூ சாகா ஹி அனந்தாச்ச-கீதை -2-41-என்று கொண்டு
பிரயோஜனங்களை அனந்தங்களாகச் சொல்லா நிற்கச் செய்தே
பின்னையும் ஆயுஸ் புத்திரன் ஷேத்ரம் என்றாப் போலே இருக்கிற
அவாந்தர பலங்களையும்
அநேகமாகச் சொல்லா நின்றது இ றே
முழுகுவாரைக் கண்டவாறே முழுகி
ஜபிப்பாரைக் கண்டவாறே ஜபியாதே
வ்யவசாயாத்மிகா புத்தி ரேகா -என்கிறபடியே
ஒன்றிலே நோக்காய் இருக்கை
முமுஷுக்களுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கும் இ றே –

வகையறு
பலதலைப் பட்டு இருக்கை தவிர்ந்து உள்ள
நுண்ணிய கேள்வி யுண்டு
ஸூ ஷ்மார்த்த விஷயமான ஸ்ரவணம்
அது நேர் பட்டு உள்ளவர்கள் –

வாய்வார்கள் –
வாய்த்தவர்கள்
நுண்ணிய கேள்வி வாய்வார்களான வேதியர்கள்  –
நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி –
இனி ஸ்ரவண விஷயமாக ஒரு கர்த்தவ்யம் இல்லை இ றே
அனந்தரம்
வ்ருத்தியிலே அந்வயிக்கும் இத்தனை இ றே
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு
தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இ றே
அது தான் போக ரூபமாய் இருக்கையாலே
எப்போதும் சமாராதன உப கரணங்களைத் தரித்துக் கொண்டு –

திசை திசையின் வேதியர்கள் –
பெரிய திரு நாளுக்கு சர்வதோத்திகமாக வந்து புகுருமா போலே
திக்குகள் தோறும் வந்து
வேதத்திலே ஒரு சந்தை கற்றவர்கள் அடைய அங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து

வேதியர்கள் –
வேத தாத்பர்யமான ப்ரணவார்த்தம் கை புகுந்தவர்கள் –

சென்று இறைஞ்சும்
கல்விக்கு பிரயோஜனம் ஆகிறது அந்த தேசத்தே
போய்க் கிட்டுகை போலே காணும் –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –
பாரத சமரத்திலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து ஊதின
வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம்
அர்ஜுனன் தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் எட்டுப் படாது ஒழிந்தவாறே
நின்ற நிலையிலே முழுக் காயாக அவியும்படிக்கு ஈடாக
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தூதின
கிருஷ்ணன் வர்த்திக்கிற ஊர்  –
ஆஸ்ரித பஷபாதி -என்றபடி –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –திசை திசையின் வேதியர்கள் -சென்று இறைஞ்சும் வேங்கடமே-
ஆஸ்ரித சம்ரஷணம் பண்ணுகைக்கு ஏகாந்த மான தேசம் என்றாய்த்து
திரு மலையை உகக்கிறது –

———————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: