முதல் திருவந்தாதி-பாசுரம் -36 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ என்று
இரக்க வேண்டாத படி
அவன் தானே வந்து அர்த்தியாய் நின்ற படியை
அநு சந்தித்து
நீ இப்படி உன்னை அழிய மாறிக் கொண்டு வந்து கார்யம் செய்து
சம்சாரிகளை உனக்காக்கிக் கொள்ளலாம் என்று
பார்த்து -அத்தாலே -என்கிறார் –

——————————————————————————-

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை ——-36-

———————————————————————————

வியாக்யானம் –

முரணை வலி தொலைதற்காம் என்றே-
எட்டுக்கு நோக்குப் போலே
ந ந்மேயம் -என்று இருக்கிறவர்கள் உடைய மிறுங்குதலைப் போக்கி
நமக்கு ஆக்கலாம் -என்றே
யானே என் தனதே -என்று இருந்து
ஏத்தவும் தவிர்ந்து
எல்லாம் செய்தாலும்
நம் சந்நிதியிலே நெகிழ்ந்து நமக்கு ஆகார்களோ என்றோ பார்த்தது –

முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் –
ஈஸ்வரனதான விபூதியை
பண்டே
தன்னதாக தானே சமைந்து இருந்துள்ள ஹிரண்யனை
இதுக்கு வேறே மேல் எழுத்து இடுவார் வேண்டாத படி
தானே தன்னதாக அபிமானித்து இருந்தது –

புண்ணிரந்த வள்ளுகிரால் –
புண் நெருங்கி
கூரிய உகிராலே
ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவன் -என்னுதல்
அன்றிக்கே
அவனுடைய புண் பட்ட நெஞ்சை பிளந்து -என்றுமாம்

பூமி யடங்கத் தன்னுடையதாக அபிமானித்து   இருந்த
மகா பலி யஞ்ஞா வாடத்திலே சென்று
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –
ரஷணத்துக்கு பரிகரமான திருவாழியை உடைய கையாலே
பூமியை இரந்து
அளந்து கொண்ட பிரகாரம்
முரணை வலி தொலைதற்  காமென்றே –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
அர்த்தித்வம் தோற்ற நின்ற சௌலப்யத்தைக் கண்ட நாட்டார்
நெஞ்சு நெகிழும் என்றே
முரண் –
அரண் அழியும் என்று நீ மண் இரந்து கொண்ட வகை
தன்னது என்று தர உகக்குமாகில் –
நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினி யான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: