முதல் திருவந்தாதி-பாசுரம் -35 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி
ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது  –
அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு
அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய
இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் –

—————————————————————————–

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் ——-35–

———————————————————————————-

வியாக்யானம் –

ஆறிய வன்பில் அடியார் –
எறிமறிந்த பக்தி இல்லாத சேஷ பூதரானர்கள்
ஆறிய அன்பாகிறது -தன்னைப் பேணாதே அத்தலைக்கு பரிகை –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அவனுக்குப் பரிகையாலே தனக்கு என்று பரிகையும் பிராதி கூல்யம் இ றே-

தம் ஆர்வத்தால் கூறிய –
தம் தாமுடைய ச்நேஹத்தாலே சொன்னவற்றைக் குற்றமாகக் கொண்டு அருளாதே ஒழிய வேணும் –
அதாகிறது -சொல்லி அல்லது நிற்க மாட்டாத படியான பிரேம பாரவச்யத்தாலே சொன்னவை இ றே –
தமக்கு இவ்வளவான தசை விளைந்த இத்தையும் அவளுடைய பக்திக்கு போறாது என்று இருக்கிறார் ஆயத்து –

குற்றமாகக் கொள்ளல் நீ –
குறையாகக் கொள்ளாதே ஒழிய வேணும்
இவன் தன ஆற்றாமைகளாலே சிலவற்றைச் சொன்னான் ஆகில் இவன் அறிந்து சொன்னானோ என்று நினைத்து இருக்க வேணும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் -திருச்சந்த விருத்தம் -111-

நீ கொள்ளேல் -என்கைக்கு எனக்குக் குற்றம் இல்லை என்கிறேன் அல்லேன் –
தேவர் அத்தைக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும்
இவன் பொறுக்க அடைய நன்றாம் -என்கிறார்
குற்றத்தைச் செய்து வைத்துக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்றால் எங்கனே செய்யும் படி என்ன-
தேறி-இத்யாதி
ராவணன் பண்ணினமிகைச் செயலானது கால க்ரமத்தாலே  போந்து
தெளிந்து சிசூபாலனாய்க் கொண்டு
சர்வாதிகனான உன் திருவடிகளைப் பெறுகைக்கு
உபாயமாய்த்து இல்லையோ –
தேறி –
பிரசன்னனாய் –
செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்னுதல்
அன்றிக்கே
சிசூபாலன் கையும் திரு வாழியும் இருந்த படி ஏன் -என்று நினைத்துக் கிடந்த அந்திம ப்ரத்யயம் ஆகவுமாம்-

நெடியோய் –
ஆநு கூல்யலேசம் உடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு
எல்லை காணப் போமோ -என்றபடி –

அடி யடைதற் கன்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் —
ஈரைந்து முடியான் படைத்த முரண் -நெடியோய் –அடி யடைதற் கன்றே-
அவன் தேவரைப் பெற்றது தன ஆநு கூல்யத்தால் அன்றே –
அவன் பேற்றுக்கு அடியான கிருபையை
என் பக்கலிலே பண்ணத் தட்டு என்-
அவனுடைய பிராதி கூல்யத்திலும் வலிதோ என் பக்கல் குற்றம்
ப்ராதி கூல்யம் ஆநு கூல்யமாகப் பலித்தால்
ஆநு கூல்ய ஆபாசம் ஆநு கூல்யமாகத் தட்டுண்டோ –

——————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: